News October 3, 2025
இந்திய அணி முன்னிலை

வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. முதல் நாளில் வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்களுக்கு சுருண்ட நிலையில், இந்தியா 2 விக்கெட்கள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-ம் நாள் ஆட்டத்தில், 75 ரன்களை கடந்துள்ள கேஎல் ராகுல் தனது 11-வது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் கில் 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் அடித்துள்ளார். Score – 174/2
Similar News
News October 3, 2025
Sports-ல் அரசியல் வேண்டாம்: PAK Ex கேப்டன்

பாக்., வீராங்கனை நடாலியா பெர்வாய்ஜ் <<17900065>>Azad Kashmir<<>>-ஐ சேர்ந்தவர் என பாக்., Ex. கேப்டன் சனா மிர் கூறியது சர்ச்சையானது. இந்நிலையில், அப்பகுதியில் வளர்ந்ததால் நடாலியா சந்தித்த கஷ்டங்களை விளக்கவே அப்படி கூறியதாக சானா மிர் விளக்கமளித்துள்ளார். வர்ணனையாளராக சொன்ன விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என கூறிய அவர், விளையாட்டு வீரர்களுக்கு இதுபோன்ற அழுத்தம் கொடுப்பதை நிறுத்தவேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.
News October 3, 2025
கரூர் துயர வழக்கு: ஐகோர்ட் அதிரடி

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், பொதுமக்களின் உயிரை பாதுகாப்பது அரசின் கடமை; பாதுகாப்பு அளிப்பதில் கட்சி பேதம் பார்க்காதீர் என ஐகோர்ட் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. பொதுக்கூட்டங்களின்போது குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், இழப்பீடுக் கோரிய வழக்குகளில் விஜய் & அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
News October 3, 2025
இன்ஸ்டகிராம் நம்மை ஒட்டுக்கேட்கிறதா?

ஒரு பொருளை பற்றி பேசிய சிறிது நேரத்தில் அது தொடர்பான விளம்பரத்தை இன்ஸ்டாவில் பார்க்கமுடியும். இதனால் இன்ஸ்டா நம்மை ஒட்டுக்கேட்கிறதா என்ற கேள்வி எழும். ஆனால் இன்ஸ்டா ஒட்டுக்கேட்பதில்லை என அதன் தலைவர் ஆடம் மறுத்துள்ளார். பிரவ்சிங் ஹிஸ்டரியை வைத்தே விளம்பரங்கள் வரும் எனவும் விளக்கமளித்துள்ளார். அதேபோல் உங்கள் நண்பர்களின் விருப்பங்களை வைத்தும் விளம்பரங்கள் வருமாம்.