News June 5, 2024
இந்திய அணி அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. நியூ யார்க்கில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் Gareth Delany 26 ரன்கள் எடுத்தார். IND தரப்பில் ஹர்திக் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து களமிறங்கிய IND அணி, 12.2 ஓவர்களில் 97/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Similar News
News August 8, 2025
கர்ப்பிணி என்று தெரிந்தும் இறக்கம் இல்லை: ராதிகா

கர்ப்பமாக இருந்த போது ஷூட்டிங்கில் எதிர்கொண்ட வலிகளை நடிகை ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார். ஒரு பாலிவுட் படத்தில் நடித்த போது தான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர், மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிய சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், டாக்டர்களை பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளாா். மேலும், அந்த வலியிலும் தன்னை படப்பிடிப்பில் ஈடுபடுத்தியதாகவும் கூறியுள்ளார்.
News August 8, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 8 – ஆடி 23 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை.
News August 8, 2025
ஹாஸ்பிடலில் இந்திய அணி ஆல்ரவுண்டர்

இந்திய அணி வீரர் நிதிஷ்குமாருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஹாஸ்பிடலில் இருக்கும் புகைப்படத்தை நிதிஷ் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், அவர் சீக்கிரம் குணமடைய வாழ்த்தி வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டிற்கு முன்பு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அவருக்கு முழங்காலில் அடிபட்டது. அதனால், தொடரை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.