News December 15, 2024

இறுதி போட்டியில் இந்திய அணி

image

9ஆவது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் அணியை இந்தியா எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2ஆவது அரையிறுதி போட்டியில் தென் கொரியாவை சீனா எதிர்கொள்கிறது. இதில் வெல்லும் அணியுடன் இறுதிப் போட்டியில் இந்திய அணி மோத உள்ளது.

Similar News

News March 11, 2026

நாடு முழுவதும் லாக்டவுன் பதற்றம்.. அடுத்த ஷாக்!

image

2020 மார்ச் மாதத்தை நாம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 25.3.2020 – 14.4.2020 வரை முதற்கட்ட லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. தற்போது சிலிண்டர் பிரச்னை மறைமுகமாக லாக்டவுனை நோக்கி நகர்த்தி வருவதாக இணையத்தில் பலரும் பதிவிட்டு வருவதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதனால், சிலிண்டர் வாங்க பலரும் குவிகின்றனர். ஆனால், பிரச்னை விரைவில் தீரும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

News March 11, 2026

திருச்சி வரும் PM மோடி.. முக்கிய திட்டங்கள் என்னென்ன?

image

திருச்சியில் இன்று மாலை நடைபெறும் அரசு விழாவில் ₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை PM மோடி தொடங்கி வைக்கிறார். நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ₹3,680 கோடி முதலீட்டில் BPC நிறுவனத்திற்கு அடிக்கல், சென்னை மணலியில் ₹1,490 கோடியில் IOC மசகு எண்ணெய் கலவை ஆலை திறப்பு உள்ளிட்டவைகள் இதில் அடங்கும். மேலும், கோவை – தன்பாத் இடையே அம்ரித் பாரத் உள்ளிட்ட 5 புதிய ரயில் சேவைகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.

News March 11, 2026

IPL தொடர் தள்ளிப் போகிறதா?

image

கேஸ் தட்டுப்பாடு காரணமாக IPL போட்டிகள் திட்டமிட்டபடி வரும் 28-ல் தொடங்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலை நீடித்தால், ஹோட்டல்களில் தங்கும் வீரர்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். விமான சேவை பாதித்தால் வீரர்கள் பயணம் செய்வது சிரமமாகும். இந்நிலையில், IPL தொடங்குவதற்குள் நிலைமை கட்டுக்குள் வரவில்லை எனில், மாற்று வழிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என IPL தலைவர் அருண் துமால் கூறியுள்ளார்.

error: Content is protected !!