News November 16, 2024
இந்திய அணி இமாலய வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி T20 போட்டியில், இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் விளையாடிய IND, திலக் (120), சாம்சன் (109) அதிரடி ஆட்டத்தால் 283/1 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய SA, 20 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அர்ஷ்தீப் 3, வருண், அக்ஷர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் T20 தொடரை 3-1 என்ற கணக்கில் IND அணி கைப்பற்றியது.
Similar News
News March 1, 2026
ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் தேர்வு!

US – இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இந்நிலையில் ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக அயதுல்லா அலி அலிரேஸா நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நிரந்தர தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் இந்த பதவியில் நீடிப்பார். தற்போது அவர் நிபுணர்கள் சபையின் துணைத் தலைவராகவும், ஈரானின் மதக்கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
News March 1, 2026
BREAKING: இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியிலும் தோல்வியை தழுவி இந்திய மகளிர் அணி(0-3) வாஷ் அவுட் ஆகியுள்ளது. அலிசா ஹீலியின்(158) அதிரடியால் 409 ரன்களை ஆஸ்திரேலிய அணி குவித்தது. இமாலய இலக்கை சேஸ் செய்த இந்தியா தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. கடைசியில் 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
News March 1, 2026
உங்கள் பெயரின் முதல் எழுத்து எது? காத்திருக்கும் அதிர்ஷ்டம்

ஜோதிடத்தின் படி எந்த எழுத்தில் பெயர் தொடங்கினால் என்ன அர்த்தம் என்று பார்ப்போம். A-தலைமை பண்பு, B-அன்பு, C-துடிப்பு, D-ஒழுக்கம், E-படைப்புத்திறன், F-கோபம், G-பரிபூரணவாதி, H-இயற்கை விரும்பி, I-புதுமைவாதி, J-பலம், K-ரொமான்டிக், L-கவனம், M-பொறுமை, N-சுதந்திரம், O-ஒழுக்கம், P-நகைச்சுவை, Q-தைரியம், R-உழைப்பு, S-புகழ், T-நிர்வாகத்திறன், U-புத்திசாலி, V-வெற்றி, W-வசீகரம், X-துணிவு, Y-தனிமை, Z-கண்ணியம்.


