News March 20, 2025
மாலத்தீவை வீழ்த்தியது இந்திய அணி

ஃபிபாவின் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில், மாலத்தீவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. மேகாலயாவில் நடைபெற்ற போட்டியில், 3-0 என்ற கோல்கணக்கில் மாலத்தீவை இந்தியா வீழ்த்தியது. இதன் மூலம் கடந்த 15 மாதங்களாக வெற்றி பெறாமல் தவித்த இந்திய அணி தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்தப் போட்டியில், ஓய்வு முடிவுக்கு விடை கொடுத்த சுனில் சேத்ரி பங்கேற்று விளையாடியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 20, 2025
டாக்டர் பரிந்துரையின்றி இந்த மாத்திரைகளை சாப்பிடாதீர்!

கோடைக் காலத்தில் ஏற்படும் வெப்ப வாதம் உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்க, Aspirin, paracetamol மாத்திரைகளை டாக்டர் பரிந்துரையின்றி உட்கொள்ளக் கூடாது என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மயக்கம், உடல்சோர்வு, தலைவலி ஏற்பட்டால், டாக்டரை சந்திக்க வேண்டும். வெப்ப வாத பாதிப்பை, காய்ச்சல் என நினைத்து, Aspirin, paracetamol மாத்திரைகளை உட்கொண்டால், ஆபத்தான எதிர்விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.
News March 20, 2025
பேரிடரில் வெயிலை சேர்க்க பரிந்துரை

பேரிடர் மேலாண்மை திட்டங்களில் வெப்ப அலைகள் போன்ற புதிய பேரிடர்களை சேர்க்க வேண்டும் என நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் பேரிடர் மேலாண்மை சட்டம் பொருத்தமானதாகவும், வளர்ந்து வரும் பேரிடர் அபாயங்களுக்கு ஏற்பவும் இருக்க வேண்டும். வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசித்து பேரிடர் பட்டியலை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கும் வழிமுறையையும் நிறுவ வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News March 20, 2025
விவசாய நிலத்தை மனையாக மாற்ற அனுமதி இல்லை

விவசாய நிலங்களைப் பிரித்து மனைகளாக விற்க அனுமதியில்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், விவசாய நிலத்தைப் பிரித்து வீட்டு மனையிடங்களாக மாற்ற முடியாது என்றார். மேலும், நிலங்களைப் பதிவு செய்வதைப் பொருத்தவரை, கிராம நத்தமாக உள்ள இடங்களைப் பொதுமக்களின் வசதிக்காக எந்த மாற்றமும் இல்லாமல் பதிவு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.