News September 30, 2025
Women’s WC : இந்திய அணி பேட்டிங்

மகளிர் உலக கோப்பை, இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் வலுவாக காணப்படும் இந்தியா, இப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது. Head to Head = 35, வெற்றி = 31 இந்தியா, 3 இலங்கை, 1 முடிவில்லை. கவுஹாத்தியில் நடக்கும் இந்த போட்டியில் யார் ஜெயிப்பாங்க?
Similar News
News March 16, 2026
அமெரிக்காவில் RSS மீது தடை விதிக்க பரிந்துரை

RSS மீது தடைவிதிக்க வேண்டுமென US அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பான சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு பரிந்துரை வழங்கியுள்ளது. மக்களின் மத சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, RSS-ஐ தடை செய்து அதன் சொத்துகளை பறிமுதல் செய்யும்படி கூறியுள்ளது. அத்துடன் RSS உறுப்பினர்கள் US-க்குள் நுழைவதைத் தடை செய்யுமாறு USCIRF எச்சரித்துள்ளது.
News March 16, 2026
சென்னையிலேயே விசாரணை நடத்துங்க: விஜய்

கரூர் விவகாரம் தொடர்பான விசாரணையை சென்னையில் நடத்தக்கோரி விஜய், ஓய்வு பெற்ற நீதிபதி, சிபிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார். கரூர் விவகாரத்தில் இதுவரை 3 முறை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். ஆனால், தற்போது சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், வேட்பாளர் தேர்வு, தேர்தல் பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் பணிகள் இருப்பதால், சென்னையில் விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
News March 16, 2026
ELECTION: 3 நாள்கள் விடுமுறை..

மார்ச் 30 முதல் ஏப்.6-ம் தேதி வரை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று TN தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதில், மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி, ஏப்.3 புனித வெள்ளி, ஏப்.5 ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாள்கள் பொதுவிடுமுறை என்பதால், அந்த நாள்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது; மற்ற அனைத்து நாள்களிலும் தாக்கல் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.


