News August 6, 2025
சரிவுடன் முடிந்த இந்தியப் பங்குச்சந்தைகள்!

இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 166 புள்ளிகள் சரிந்து 80,543 புள்ளிகளிலும், நிஃப்டி 75 புள்ளிகள் சரிந்து 24,574 புள்ளிகளிலும் முடிந்தன. Infosys, Wipro, Tech Mahindra, Sun Pharma உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Similar News
News August 6, 2025
UPI பயன்படுத்த கட்டணம்? RBI கவர்னர் அறிவிப்பு

Gpay, Phonepe போன்ற UPI சேவைகளுக்கு விரைவில் கட்டண அறிவிப்பு வெளியாகலாம். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, UPI சேவையை நீண்டகாலத்துக்கு இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. யாராவது அந்த சுமையை ஏற்றுதான் ஆகவேண்டும் என்றார். ஏற்கெனவே <<17195322>>தான் கூறியதை<<>> அவர் மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதால், விரைவில் கட்டண விதிப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 6, 2025
டிரம்புக்கு பதில் மோடியை அழைப்பேன்: பிரேசில் அதிபர்

சமீபத்தில் பிரேசில் பொருட்கள் மீது 50% வரி விதித்தார் டிரம்ப். இந்நிலையில் இதுதொடர்பாக விவாதிக்க பிரேசில் அதிபர் எப்போது வேண்டுமானாலும் தன்னை அழைக்கலாம் என டிரம்ப் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, தான் டிரம்பை அழைத்து இதுபற்றி பேசபோவதில்லை என்றும், அதற்கு மாற்றாக PM மோடி, சீனா அதிபர் ஜி ஜின் பங்கை அழைத்து பேசுவேன் என தெரிவித்துள்ளார்.
News August 6, 2025
உலக சந்தையில் மீண்டும் இறங்குமுகத்தில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் இருந்தது. அதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் <<17317784>>விலை ஜெட் வேகத்தில்<<>> உயர்ந்து வந்தது. இந்நிலையில், இன்று(ஆக.6) சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் தங்கம் 16 USD(₹1,403) குறைந்து 3,365 USD-க்கு விற்பனையாகிறது. இதனால், நாளை(ஆக.7) இந்திய சந்தையில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார அறிஞர்கள் கணித்துள்ளனர். எப்படியோ குறைந்தால் சரி..!