News March 4, 2025
தொடர் சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவதால் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இன்று காலையில் நிஃப்டி 62.10 புள்ளிகள் சரிந்து 22,057.20 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் 191 புள்ளிகள் சரிந்து 72,894.23 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Similar News
News March 4, 2025
கரும்பு கொள்முதல் விலை உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி!

2024 – 25ஆம் ஆண்டுக்கான பருவத்திற்கு கரும்பு கொள்முதல் விலையை அரசு உயர்த்தியுள்ளது. 9.50% (அ) அதற்கும் குறைவான சர்க்கரை திறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ₹3,151ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 9.85% சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ₹3,267ஆகவும், 10.10% சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ₹3,344ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள்.
News March 4, 2025
விஜய் MGR-ஆக முடியாது: ஜெயக்குமார் விமர்சனம்

2026 தேர்தலில் ஆட்சி அமைப்பதை இலக்காகக் கொண்டு தவெக தலைவர் விஜய் காய் நகர்த்தி வருவதாக பேசப்படுகிறது. ஆனால், 2026-ல் தவெக ஆட்சி அமைக்கும் என விஜய் பகல் கனவு காண்பதாக அதிமுகவின் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் அவ்வாறு பேசி வருவதாகவும், விஜய் ஒருபோதும் MGR ஆக முடியாது என்றும் ஜெயக்குமார் காட்டமாக கூறியுள்ளார்.
News March 4, 2025
அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அமரன். மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் உலக கலாசார விழாவில் திரையிட அமரன் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்த அறிவிப்பால் அமரன் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.