News April 4, 2025
இந்திய பங்குச் சந்தையில் ₹8.5 லட்சம் கோடி இழப்பு

அதிபர் ட்ரம்ப்பின் புதிய வரிவிதிப்பால் அமெரிக்க பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இதனால், சென்செக்ஸ் 914 புள்ளிகள் சரிந்து 75,381 புள்ளிகளிலும், நிப்ஃடி 343 புள்ளிகள் குறைந்து 22,906 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. பங்குகள் விலை சரிவால் முதலீட்டாளர்களுக்கு ₹8.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News April 10, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து மூத்த தலைவர் விலகல்

அதிமுகவில் இருந்து கோவை மாவட்ட MGR அணி செயலாளர் சந்திரசேகர் விலகியுள்ளார். தனிப்பட்ட வேலை காரணமாக தன்னால் கட்சிப் பணிகளில் பாேதிய கவனம் செலுத்த முடியாத சூழல் உள்ளது என்றும், ஆதலால் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தாம் விலகுவதாக சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளராகவும் சந்திரசேகர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News April 10, 2025
WARNING: இந்த 5 உணவுகளை மீண்டும் சூடுபடுத்தாதீங்க

சமைத்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக உருளைக்கிழங்கை மேலும் சூடுபடுத்தும்போது, அதிலுள்ள நைட்ரேட்களால் வாந்தி, குமட்டல் ஏற்படும். கீரைகளில் உள்ள அமினோ அமிலம் புற்றுநோய்க் காரணியாக மாறக்கூடும். காளானை மேலும் சூடுபடுத்தினால் இதயநோய் ஆபத்து அதிகமாகும். முட்டையையும் மீண்டும் சூடுபடுத்தக் கூடாது. SHARE IT
News April 10, 2025
சோஷியல் மீடியாவில் போட்டி.. அரசு சிறப்பு பரிசு

அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்.14-ஐ சமத்துவ நாளாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டு ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டா, யூடியூப்களில் பல்வேறு போட்டிகளை அரசு அறிவித்துள்ளது. வெற்றியாளர்களை அமைச்சர் சாமிநாதன் நேரில் அழைத்து பரிசு வழங்குவார். விருப்பமுள்ளவர்கள் tndiprmhsamathuvamkanbom@gmail.com என்ற மெயில் ஐடிக்கு தங்கள் படைப்புகளை வரும் 30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு <