News June 16, 2024
நாளை இந்திய பங்குச்சந்தை விடுமுறை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாளை இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் வர்த்தகம் மீண்டும் தொடங்கும் என தேசிய பங்குச்சந்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து 3 நாள்கள் (சனி, ஞாயிறு, திங்கள்) விடுமுறையை சந்திக்கிறது. அதே நேரம், MCX மார்க்கெட் நாளை மாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 2, 2026
ஈரோடு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

முன்பின் தெரியாத நபர்கள் தங்கள் நண்பர் அனுப்பும் பணத்தை உங்கள் வங்கி அல்லது UPI கணக்கில் பெற்று தர கோரினால், அதை உடனடியாக நிராகரியுங்கள் என ஈரோடு காவல்துறை எச்சரித்துள்ளது. இணைய திருடர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க, அப்பாவி மக்களின் கணக்குகளைப் பயன்படுத்தி அவர்களை குற்றவாளிகளாக்குகின்றனர். மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து இத்தகைய மோசடிகளில் சிக்காமல் காத்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 2, 2026
OPS திமுகவில் இணைந்தது வேதனை அளிக்கிறது: KAS

தவெகவிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட OPS, திமுகவில் இணைந்தது செங்கோட்டையனுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் OPS திமுகவில் இணைந்தது வேதனைக்குரியது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதா மீது வழக்கு போட்டவர்கள் திமுகவினர் என்பதை OPS சிந்தித்து பார்த்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 2, 2026
48 முக்கிய தலைவர்களை கொன்றுள்ளோம்: டிரம்ப்

ஈரான் மீதான அமெரிக்க ராணுவத் தாக்குதல்களில் ஈரான் உயர் தலைவர் கமேனி உள்பட 48 முக்கிய தலைவர்களை கொன்றுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் திட்டமிட்டதை விட ஈரான் மீதான தாக்குதல் வேகமாக, மிக சிறப்பாகவே நடைபெறுகிறது என்று கூறியுள்ளார். ஈரான் மீதான தாக்குதலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவது பற்றியோ, எண்ணெய் விலை உயர்வது பற்றியோ கவலையில்லை எனவும் பேசியிருந்தார்.


