News August 5, 2024
இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

அமெரிக்க பங்குச்சந்தை வீழ்ச்சியின் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தை சரிவை கண்டுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 484 புள்ளிகள் சரிந்து, 24,236 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,556 புள்ளிகள் சரிந்து, 79,422 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. வங்கி, ஆட்டோ, ஐடி உள்ளிட்ட அனைத்துத் துறை பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
Similar News
News March 27, 2026
இன்ஸ்டாகிராமில் புதிய உச்சம் தொட்ட CSK

கிரிக்கெட் களத்தில் மட்டுமின்றி SM-லும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட அணி என்ற பெருமையை CSK பெற்றுள்ளது. இந்நிலையில் 5 முறை சாம்பியனான CSK-வை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 22 மில்லியனை தொட்டுள்ளது. நடப்பு சாம்பியன் RCB 22.2 மில்லியன் ஃபாலோயர்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. MI அணி 19 மில்லியனுடன் 3-வது இடத்தில் உள்ளது. நீங்க எந்த அணியை ஃபாலோ பண்றீங்க?
News March 27, 2026
மாணவிக்கு தொல்லை.. குரல் கொடுத்த அண்ணாமலை

அண்ணா பல்கலையில் பேராசிரியர் ஒருவர் <<19489815>>மாணவிக்கு பாலியல் தொல்லை<<>> கொடுத்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது துரதிருஷ்டவசமானது என்ற அவர், பல்கலை.,யில் உள்ள, பாலியல் தொல்லை தடுப்பு குழு செயல்பாட்டில் இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி விசாரணை நடத்தி, அமைச்சர் கோவி.செழியன் பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News March 27, 2026
சற்றுமுன்: விஜய்க்கு அதிர்ச்சி.. கடைசி நேரத்தில் சிக்கல்

பெரம்பூரில் நாளை நடைபெறவிருந்த விஜய்யின் பரப்புரைக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான இடம் எனக்கூறி அனுமதி வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மாற்று இடம் கேட்டு விண்ணப்பிக்குமாறும் போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையிட தவெக திட்டமிட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


