News April 5, 2025
கனடாவில் இந்தியர் குத்தி படுகொலை!

கனடாவின் ஒட்டாவாவில் இந்தியர் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொல்லப்பட்ட இந்தியர் யார், எதற்காக படுகொலை செய்யப்பட்டார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்து காவல்துறை விசாரிப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது. கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
செங்கல்பட்டு: 10th, 12th போதும், 14,967 காலியிடங்கள்!

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் இங்கு <
News December 10, 2025
திருப்பரங்குன்றம் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா மற்றும் பெரிய வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் SC வரை சென்றுள்ள நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 10, 2025
சுபகாரியங்களுக்கு வாழை மரம் கட்டுவது ஏன்?

சுபகாரியங்கள் நடைபெறும் இடங்களிலும், கல்யாண வீடுகளிலும் முகப்பு பந்தலில் வாழை மரம் கட்டுவது தமிழர்களின் வழக்கம். அதில் வாழைப்பழ குலையும் தொங்கும். இதற்கான காரணம் தெரியுமா? வாழையடி வாழையாக குலம் தழைத்து வாழவேண்டும் என்ற அடிப்படையில் அவ்வாறு செய்யப்படுகிறது. மேலும், வாழையின் இலை, பூ, காய், கனி என எல்லாமும் பயன்படுவது போல, நாமும் பயனுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது அர்த்தமாகும்.


