News April 8, 2025
அர்ஜென்டினாவில் தங்கம் வென்ற இந்திய மகன்!

அர்ஜென்டினாவில் நடந்த உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ருத்ராங்க் ஷ் பாட்டீல் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஆண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் போட்டியிட்ட ருத்ராங்க், ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டார். இறுதியில் 252.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
Similar News
News August 21, 2025
குங்குமம் கொட்டினால் அபசகுணமா?

குங்குமம் கொட்டினால், பெரிய அபசகுணம் என அலறுவார்கள். மேலும் வீட்டுப் பெண்களுக்கு தாலிக்கு ஆபத்து என்றும் நம்பப்படுகிறது. திருமணமான பெண்களின் அடையாளமாக குங்குமம் இருப்பதால், இவ்வாறான கருத்து நிலவுகிறது. குங்குமம் கொட்டுவதால், தீங்கு நடந்ததாக சிலர் சொன்னாலும், அதெல்லாம் Coincidence மட்டுமே. கைதவறினாலும், பசங்க விளையாடும் போது குங்கும சிமிழி கீழே விழுந்தாலும், மனம் சஞ்சலப்பட வேண்டாம்!
News August 21, 2025
BREAKING: தவெக மாநாடு.. விஜய்யின் தொண்டர் மரணம்

மதுரை தவெக மாநாட்டுக்கு சென்ற சென்னையை சேர்ந்த பிரபாகர் என்பவர் சக்கிமங்கலம் அருகே மாரடைப்பால் உயிரிழந்தார். ஏற்கெனவே மாநாட்டு அரங்கில் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநாட்டு அரங்கில் 40-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 21, 2025
மக்கள் மன்னன், பெரியாரின் பேரன் விஜய் என புகழாரம்

மதுரை, தவெக மாநாட்டு அரங்கில் அக்கட்சியின் சார்பில் 2-வது பாடல் வெளியிடப்பட்டது. அதில், மக்களின் மன்னனே.. பெரியாரின் பேரனே என்ற வரிகளும் இடம் பெற்றுள்ளன. 2026 தேர்தலில் தமிழகத்தின் வரலாற்றை மாற்றும் ‘எங்கள் அண்ணன்’ உங்கள் விஜய், உங்கள் விஜய் வரவா என பெரியார், விஜயகாந்த் உள்ளிட்டோரை ஹைலைட் செய்யும் வரிகள் இடம் பெற்றுள்ளன.