News April 10, 2024

இந்திய ரூபாய் மதிப்பு 28% சரிவு

image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த 10 ஆண்டில் 28% சரிந்துள்ளது புள்ளி விவரம் மூலம் தெரிய வந்திருக்கிறது. 2013ஆம் ஆண்டில் ரூபாய் மதிப்பு ₹54.59இல் இருந்து ₹60.14ஆக சரிந்தது. இதையடுத்து ₹60.14ல் இருந்து படிப்படியாக சரிந்து ₹83.31ஆக உள்ளது. இது 10 ஆண்டுகளில் 27.8% வீழ்ச்சி அடைந்துள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு 304 பில்லியன் டாலரில் இருந்து 645 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

Similar News

News November 6, 2025

பாலில் ஊறவைத்த உலர் திராட்சையின் நன்மைகள்

image

*பாலில் ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையை சாப்பிடுவதால் எலும்புகள் வலுப்பெறும். *உடலில் ரத்த பற்றாக்குறையை தீர்க்க இது உதவும். *நம் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கும். *உடலில் உள்ள அனைத்து நச்சுகளும் வெளியேற்றப்படும். *ரத்த அழுத்த பிரச்னையை குறைத்திடும். *ஆண்களின் விந்தணு இயக்கம் அதிகரிக்கும். *பாலை நன்கு கொதிக்கவைத்து, அதன் பிறகு 10-15 உலர் திராட்சையை போட்டு ஊறவைத்து குடிக்கவும்.

News November 6, 2025

புலனாய்வுத்துறையில் 258 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

image

மத்திய அரசின் புலனாய்வுத்துறையில் 258 காலிப்பணியிடங்கள் உள்ளன. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்று, 2023 முதல் 2025 வரை கேட் தேர்வில் தகுதி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். www.mha.gov.in/en என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக வரும் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News November 6, 2025

WPL: தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள் லிஸ்ட்

image

மகளிர் உலகக் கோப்பையை இந்தியா வென்ற நிலையில், தற்போது ஒட்டுமொத்த கவனமும் பிரீமியர் லீக் மீது திரும்பியுள்ளது. 2 முறை மும்பையும், ஒரு முறை பெங்களூருவும் சாம்பியன்களாக உருவெடுத்துள்ளன. அடுத்த சீசனுக்கான ஏலம் இம்மாத இறுதியில் நடக்கவுள்ளது. அதன்படி, ஒவ்வொரு அணியும் தக்கவைத்த வீராங்கனைகளின் பட்டியலை EPSN தளம் வெளியிட்டுள்ளது. முழு விவரத்தை SWIPE செய்து பார்க்கவும்.

error: Content is protected !!