News October 4, 2025
செவ்விந்தியர்கள் பொன்மொழிகள்

*அமைதிக்காக அழாதீர்கள், அமைதிக்காக செயல்படுங்கள்.
*என்னிடம் சொல், நான் மறந்துவிடுவேன்; காண்பி, நினைவில் நிறுத்த முடியாமல் போகலாம்; என்னை ஈடுபடுத்து, அப்போது புரிந்து கொள்வேன்.
*குறைவாகப் பேசும் வாயும், அதிகமாக உழைக்கும் கரங்களும் எப்போதும் சிறந்தவை.
*மனிதரின் சட்டங்கள் மனிதருக்கு மனிதர் மாறுபடும். ஆனால் இயற்கையின் சட்டங்கள் ஒருபோதும் மாறுவதில்லை. *நமது முதல் ஆசிரியர், நம் இதயமே.
Similar News
News October 4, 2025
நுரையீரல் கழிவுகளை நீக்கும் மந்தாரை தேநீர்!

மாசு நிறைந்த காற்று, வாகனப் புகை, சிகரெட் புகை போன்றவை நுரையீரலில் அழுக்காகப் படியும். இந்தக் கழிவுகளை நீக்கி, நுரையீரலை பலப்படுத்தும் ஆற்றல் மந்தாரைக்கு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். மந்தாரை இலை & பூக்கள் (1-2), சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மந்தாரை டீ ரெடி. இந்த டீயை காலையில் குடிக்கலாம். SHARE IT.
News October 4, 2025
இலவச சிலிண்டர் … ஹேப்பி நியூஸ்

‘PM உஜ்வாலா யோஜனா’ திட்டத்தில் ஏழை பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. இது தவிர மானியமும் வழங்கப்படுகிறது. TN-ல் ஏற்கெனவே 40 லட்சம் பேருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. தற்போது இத்திட்டத்தில் 25 லட்சம் புதிய காஸ் இணைப்புகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில், 10%(2.50 லட்சம்) இணைப்புகள் நகரமயமாக்கல் அதிகமாக இருக்கும் தமிழகத்திற்கு ஒதுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 4, 2025
கரூர் சம்பவத்தில் விஜய் என்ன தவறு செய்தார்?: H ராஜா

ஒட்டுமொத்த கரூர் சம்பவத்தில் விஜய் என்ன தவறு செய்தார் என்று H ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் காலதாமதமாக வந்தார் என்றால், அது எப்படி தவறாகும் என பேசிய அவர், 36 மணி நேரம் கழித்து வந்த MGR-ஐ பார்ப்பதற்கு மக்கள் காத்திருந்தனர் என்றும் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் மீது தவறிருப்பதாகவும், கரூர் SP-ஐ சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.