News July 15, 2024
“X” தளத்தில் இந்திய அரசியல் தலைவர்கள்

2009ம் ஆண்டு முதல் X தளத்தை பிரதமர் மோடி பயன்படுத்துகிறார். தற்போது அந்த தளத்தில் மோடியை பித்தொடர்வோர் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளது. இதுபோல் மற்ற அரசியல் தலைவர்கள், பிரபலங்களை பின் தொடர்வோர் எண்ணிக்கை குறித்து தெரிந்து கொள்ளலாம். *ராகுல் – 2.64 கோடி *கெஜ்ரிவால் – 2.75 கோடி *அகிலேஷ் – 1.99 கோடி * மம்தா – 74 லட்சம் * லாலு – 63 லட்சம் * தேஜஸ்வி – 52 லட்சம் * சரத் பவார் – 29 லட்சம்.
Similar News
News November 22, 2025
குழந்தைகள் இதையெல்லாம் கவனிக்கிறாங்க.. கவனம்!

உங்கள் குழந்தைகளுக்கு எதுவும் புரியாது என நினைக்க வேண்டாம். நீங்க செய்யும் ஒவ்வொன்றையும் நோட் பண்றாங்க. குறிப்பாக, ➤குரலை வைத்தே உங்கள் மனநிலையை கணிப்பர் ➤நீங்கள் மற்றவர்களை எப்படி நடத்துறீங்க என்பதை கவனிப்பர் ➤பிரச்னையை எப்படி கையாள்கிறீர்கள் என்பதை நோட் செய்கிறார்கள் ➤நீங்கள் கற்பிப்பதை நீங்கள் முதலில் ஃபாலோ செய்கிறீர்களா என பார்க்கிறார்கள். எனவே அவர்கள் முன் கவனமா இருங்க பெற்றோர்களே. SHARE.
News November 22, 2025
சபரிமலைக்கு நவ.28 முதல் சிறப்பு பஸ்கள்

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து நவ.28 முதல் ஜன.16 வரை கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சபரிமலை செல்லும் பக்தர்கள் www.tnstc.in இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். டிச.27 – 30 வரை கோயில் நடை சாத்தப்படுவதால் அந்த நாள்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படாது.
News November 22, 2025
இந்தியாவில் தமிழகம் தான் டாப்.. எதில் தெரியுமா?

பாலின சமத்துவம், பொது பாதுகாப்பு, பன்முகத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய Civic Sense-ல் எந்த மாநிலம் சிறந்து விளங்குகிறது என்ற ஆய்வை இந்தியா டுடே நடத்தியது. இதில், சமூக நடத்தையில், தமிழகம் ஒட்டுமொத்த இந்தியாவையும் வாயை பிளக்க வைத்துள்ளது. இதேபோல், டாப் 10-ல் இடம்பிடித்த மாநிலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


