News August 9, 2024

ODI தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்

image

ODI போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்கள் வரிசையில், டாப்-5இல் 3 இடங்களை இந்திய வீரர்கள் பிடித்துள்ளனர். அதாவது, சுப்மன் கில், ரோஹித் ஷர்மா & விராட் கோலி முறையே 2, 3 & 4 ஆவது இடங்களில் உள்ளனர். முதலிடத்தில் (PAK) பாபர் அசாம் தொடருகிறார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் குல்தீப் யாதவ், முகமது சிராஜுடன் 4ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Similar News

News November 9, 2025

பிஹாரில் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது

image

பிஹாரில் அனல் பறந்த 2-ம் கட்ட தேர்தல் பரப்புரை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. கடந்த 6-ம் தேதி 121 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 122 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட தேர்தல் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. 3.70 கோடி வாக்காளர்கள் இதில் வாக்களிக்க உள்ள நிலையில், 1,307 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.

News November 9, 2025

BREAKING: விஜய் அப்பாவுக்கு முக்கிய பொறுப்பு

image

தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, SAC தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்தபோது, ₹8 கோடி வரை முறைகேடு நடந்ததாக SAC குற்றஞ்சாட்டினார். இதனையடுத்து, அவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. குழு அளிக்கும் தகவலின்படி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 9, 2025

அடி அலையே ஸ்ரீலீலா PHOTOS

image

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்னரே, தனது நடனம் மற்றும் நடிப்பு மூலம் தமிழ் ரசிகர்களை ஈர்த்துவிட்டார். புஷ்பா- 2 படத்தில் ஆடிய ஆட்டத்தில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இவரது சமீபத்திய போட்டோஸ் உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

error: Content is protected !!