News September 5, 2024
தங்கம் வென்றார் இந்திய வீரர்

பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸ் ஆடவர் வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார் ஹர்விந்தர் சிங். இறுதிப் போட்டியில் போலந்து வீரர் லூகாஸ் சிகெக்கை 6-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். 4 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் 15ஆவது இந்தியா முன்னேறியுள்ளது. ஏற்கனவே, கலப்பு இரட்டையர் பிரிவில் ஷீதல் தேவி, ராகேஷ் குமார் ஜோடி வெண்கலம் வென்றனர்.
Similar News
News July 11, 2025
மினிமம் பேலன்ஸ் இல்லையா.. BOB வங்கியில் சலுகை

சாதாரண சேமிப்பு கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் தொகை பராமரிக்கவில்லையேல் பேங்க் ஆப் பரோடா (BOB ) அபராதம் விதித்து வந்தது. இந்நிலையில், அந்த வங்கி தற்போது மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் இனி கவலை கொள்ள வேண்டாம், அபராதம் விதிக்கப்படாது என அறிவித்துள்ளது. இந்த நடைமுறை கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், ஆனால் இது ப்ரீமியம் சேமிப்பு கணக்குகளுக்கு பொருந்தாது எனவும் BOB கூறியுள்ளது.
News July 10, 2025
கோவை குண்டுவெடிப்பு: பறிபோன 58 உயிர்கள் REWIND

1998. பிப்.14. கோவை தொடர் குண்டுவெடிப்பால் தமிழகமே அதிர்ந்து போன தினம். இந்த சம்பவத்தில் 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 58 பேர் உயிரிழந்தனர். தேர்தல் பிரசாரத்துக்கு அத்வானி கோவைக்கு வரப் போகும் சமயத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த கொடூர குற்றத்தில் முக்கிய குற்றவாளியான சாதிக் (எ) டெய்லர் ராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், பறிபோன 58 உயிர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம்?
News July 10, 2025
பட்டாவில் அதிரடி மாற்றம்… விரைவில் புதிய நடைமுறை

இ- பட்டாவில் போட்டோவை இணைக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. நில மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த திட்டத்தை கொண்டுவர இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். eservices.tn.gov.in இணையதளத்தில் மாவட்டம், வட்டம், கிராமம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு இ- பட்டாவை டவுன்லோடு செய்து கொள்ளலாம். SHARE IT.