News August 10, 2025

பண்ட் போன்று காயத்துடனே விளையாடிய இந்திய வீரர்

image

ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரில் காயம் ஏற்பட்டாலும் களத்தில் இறங்கி போராடிய பண்ட், வோக்ஸ் ஆகியோரின் அரிப்பணிப்பை பலரும் பாராட்டினர். இந்நிலையில் இந்திய வீரர் கருண் நாயரும் விரலில் சிறியளவிலான எலும்பு முறிவுடனே 5-வது டெஸ்டின் 2-வது இன்னிங்க்ஸ்-க்கு பேட்டிங் செய்ய வந்ததாக கூறப்படுகிறது. இக்காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதால் துலிப் டிராபி தொடரை அவர் தவறவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News August 10, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 10 – ஆடி 25 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 AM – 4:30 AM ▶திதி: துவிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.

News August 10, 2025

ஒரு விமானத்தை கூட வீழ்த்தவில்லை: பாகிஸ்தான்

image

ஆபரேஷன் சிந்தூரில் பாக்.,-ன் 6 போர் விமானங்களை வீழ்த்தியதாக IAF தளபதி அமர் பிரீத் சிங் கூறியிருந்தார். ஆனால், இதை பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் மறுத்துள்ளார். ஒரு போர் விமானத்தை கூட இந்தியா வீழ்த்தவில்லை எனவும், நம்பிக்கை இல்லாத பட்சத்தில் நடுநிலை அமைப்புகள் இதை விசாரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியா உண்மையை வெளிக்கொண்டு வர விடாது என்றும் கூறியுள்ளார்.

News August 10, 2025

தோனி, கோலி கொடுத்த அட்வைஸ் இதுதான்: ஆகாஷ்

image

தோனி, கோலி கொடுத்த அட்வைஸை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் நினைவு கூர்ந்துள்ளார். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், பயிற்சி செய்யுங்கள் என கோலி சொன்னதாகவும், பயிற்சி தான் உங்களுக்கு தன்னம்பிக்கையை தரும் என தோனி சொன்னதாகவும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும், கிரிக்கெட் என்பது தன்னம்பிக்கையின் விளையாட்டு, அதில் நீங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே நம்பிக்கை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!