News August 4, 2024
காலிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா தோல்வி

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் குத்துச் சண்டை போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீராங்கனை லவ்லினா தோல்வியை தழுவினார். காலிறுதியில் சீனாவின் முதல் நிலை வீராங்கனை லி கியானை எதிர்கொண்ட அவர் 1-4 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால், 2ஆவது ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பை அவர் தவறவிட்டார். இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 17, 2026
தி.மலையில் MLA அலுவலகங்களுக்கு ‘சீல்’!

திருவண்ணாமலையில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத்தொடா்ந்து MLA அலுவலகங்களுக்கு நேற்று சீல் வைத்தனா். ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவின் பேரில், செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட 8 சட்டப்பேரவைத் தொகுதிகளின் எம்எல்ஏ அலுவலகங்களைப் பூட்டி, அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த வட்டாட்சியா் முன்னிலையில் வருவாய்த் துறை அலுவலா்கள் சீல் வைத்தனா்.
News March 17, 2026
ராணிப்பேட்டையில் MLA அலுவலகங்களுக்கு ‘சீல்’!

ராணிப்பேட்டையில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத்தொடா்ந்து MLA அலுவலகங்களுக்கு நேற்று சீல் வைத்தனா். ஆட்சியா் சந்திரகலா உத்தரவின் பேரில், அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின் எம்எல்ஏ அலுவலகங்களைப் பூட்டி, அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த வட்டாட்சியா் முன்னிலையில் வருவாய்த் துறை அலுவலா்கள் சீல் வைத்தனா்.
News March 17, 2026
இந்த 12 ஆவணங்களை கொண்டும் வாக்களிக்கலாம்

1.ஆதார், 2.MNREGA அட்டை, 3.வங்கி (அ) அஞ்சலக பாஸ்புத்தகங்கள், 4.தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட இன்ஷூரன்ஸ் கார்டு, 5.ஓட்டுநர் உரிமம், 6.பான் கார்டு, 7.NPR-ன் ஸ்மார்ட் கார்டு, 8.பாஸ்போர்ட், 9.ஓய்வூதிய ஆவணம், 10.மத்திய, மாநில அரசுகள், பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஐடி கார்டு, 11.MP, MLA, MLC-க்களுக்கான ஐடி கார்டு, 12.அரசால் வழங்கப்பட்ட தனித்துவ மாற்றுத்திறனாளி அடையாள அட்டை.


