News April 10, 2024
இந்திய வம்சாவளி மாணவர்கள் மரணம்! பின்னணி என்ன?

அமெரிக்காவில் நடப்பு ஆண்டு இந்திய வம்சாவளி மாணவர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அனைவரும் 25 வயதிற்குட்பட்டவர்கள். இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், துப்பாக்கிச்சூடு, கடத்தல், தற்கொலை உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய காரணங்கள் இறப்புகளுக்கான பின்னணியாக இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், இனவெறியை மாணவர்களின் மரணங்களுக்கான காரணமாக கருத முடியாது எனக் கூறப்படுகிறது.
Similar News
News March 15, 2026
9 டூ 5 ஜாப்: இதன் உண்மையான அர்த்தம் தெரியுமா?

9-5 என்றால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான வேலை அல்ல. 9 மணி நேர வேலை(1 மணி நேர Break), 5 நாள்கள் என்பதே அதன் உண்மையான அர்த்தம். 1926-ம் ஆண்டு USA-ல் ஹென்றி ஃபோர்டு 40 மணி நேர வேலை (5 நாள்கள் × 8 மணிநேரம்) என்ற கான்செப்ட்டை அறிமுகப்படுத்தினார். 1948-ம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டம் வரையறுக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் இது நடைமுறைக்கு வந்தது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.
News March 15, 2026
தொகுதிப் பங்கீடு.. EPS எடுத்த முடிவு

அதிமுகவில் உள்ள கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை EPS அமைத்துள்ளார். அதில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், SP வேலுமணி, வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நாளை முதல் கூட்டணி கட்சிகளுடன் இக்குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. காங்கிரஸ், மமக, கொமதேக, மதிமுக ஆகிய கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 15, 2026
நடிகை த்ரிஷா பிரச்னை முடிவுக்கு வந்தது

<<19332195>> பார்த்திபன் – த்ரிஷா<<>> இடையே பிரச்னை உருவானது அனைவரும் அறிந்ததே. தற்போது, அவர்களுக்கு இடையேயான மோதல் முடிவுக்கு வந்திருப்பதாக SM-ல் பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், மும்பையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற த்ரிஷா, பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை பதிவிட்டிருப்பதுதான். இதனை பார்த்த நெட்டிசன்கள், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


