News January 18, 2025
வெறுக்கப்படும் உணவுகள் பட்டியலில் இந்திய உணவு

உலகில் அதிகமாக வெறுக்கப்படும் உணவுகளின் பட்டியலில் பஞ்சாப் மக்களால் விரும்பி உண்ணப்படும் மிஸ்ஸி ரொட்டி 56ஆவது இடம் பிடித்துள்ளது. டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ள அந்த பட்டியலில், அயர்லாந்தின் Blodpalt முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தின் Jellied eels, அமெரிக்காவின் Frog eye salad, ஸ்பெயினின் Angulas a la cazuela உள்ளிட்டவை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
Similar News
News August 25, 2025
திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதிப்பு: இபிஎஸ்

திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் இல்லை என இபிஎஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் நன்மை அடைந்ததாகக் குறிப்பிட்ட அவர், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்படும் என உறுதியளித்தார்.
News August 25, 2025
ராசி பலன்கள் (25.08.2025)

➤ மேஷம் – சோர்வு ➤ ரிஷபம் – செலவு ➤ மிதுனம் – சாதனை ➤ கடகம் – அமைதி ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – மகிழ்ச்சி ➤ துலாம் – வரவு ➤ விருச்சிகம் – தடங்கல் ➤ தனுசு – நலம் ➤ மகரம் – களிப்பு ➤ கும்பம் – சுகம் ➤ மீனம் – மேன்மை.
News August 24, 2025
குட்டி தளபதி பட்டம்… SK மறுப்பு

தன்னை குட்டி தளபதி என்று அழைப்பதை சிவகார்த்திகேயன் மறுத்துள்ளார். ‘மதராஸி’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் ‘கோட்’ படத்தின் துப்பாக்கி பகிரும் காட்சியில் விஜய் சார் எனக்கு ஊக்கமளிப்பதாக உணர்ந்தேன். படம் வெளியான பிறகு பலரும் என்னை குட்டி தளபதி, திடீர் தளபதி என்றெல்லாம் அழைத்தனர். இதை நான் ஏற்கவில்லை. அண்ணன் அண்ணன் தான், தம்பி என்றுமே தம்பி தான் என சிவகார்த்திகேயன் பேச அரங்கம் அதிர்ந்தது.