News October 22, 2025
4 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கனில் இந்திய தூதரகம்

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள இந்திய அரசின் அலுவலகத்தை தூதரகமாக மேம்படுத்தி, வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இருதரப்பு உறவை மேம்படுத்தும் முயற்சி இதுவென்றும் தெரிவித்துள்ளது. 2021-ல் தாலிபன்கள் ஆப்கனில் ஆட்சியை கைப்பற்றியதும், இந்தியா தனது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது. இருப்பினும், 2022-ல் சில அதிகாரிகளுடன் அலுவல் குழு அனுப்பி வைக்கப்பட்டது.
Similar News
News October 22, 2025
புயல் என்றால் என்ன தெரியுமா?

வளிமண்டலத்தில் காற்றழுத்தம் குறையும்போது ‘காற்றழுத்த தாழ்வு நிலை’ உருவாகிறது. தரையில் இருக்கும் வெப்பக்காற்று உயரும்போது, இப்படியான நிலை ஏற்படும். பொதுவாக இது கடற்பரப்பில் நடைபெறும். இந்த நிலை படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று மாறும். இறுதியாக, சுறாவளிக் காற்றின் வேகம் 30 knotகளை கடக்கும்போது அது புயல் என அறிவிக்கப்படுகிறது. SHARE IT!
News October 22, 2025
Sports Roundup: தமிழ் தலைவாஸ் 11-வது தோல்வி

*புரோ கபடியில் பெங்கால் வாரியர்ஸ் 44-43 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸை வீழ்த்தியது. *ஐசிசி மகளிர் ODI பேட்டிங் தரவரிசையில், இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 3 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார். * மகளிர் நட்புறவு கால்பந்தில், ஈரான் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. *பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன், முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் தோல்வி.
News October 22, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 22, ஐப்பசி 5 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்:9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்:7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பிரதமை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை