News September 2, 2025

வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்

image

இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 2025-26 நிதியாண்டில் 6.5% ஆக இருக்கும் என கிரிசில்(Crisil) ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி 6.5% ஆக இருக்க, 2025-26 முதல் காலாண்டில் 7.8% ஆக உயர்ந்தது. ஆனால், அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால், ஏற்றுமதியில் பாதித்தாலும், தனியார் நுகர்வு வளர்ச்சி அதிகரிப்பதால் வளர்ச்சி ஏற்றத்தில் இருக்குமாம்.

Similar News

News September 2, 2025

ஊழல் பணத்தை பிரிப்பதில் திமுகவில் தகராறு: EPS

image

தமிழகம் முழுவதும் பல மாநகராட்சிகளில் ஊழல் செய்த பணத்தை பிரிப்பதில் திமுகவினரிடையே தகராறு ஏற்படுவதாக EPS கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். மதுரையில் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், மக்களின் பிரச்னைகளை தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சர்களாக உள்ளதாக சாடினார்.

News September 2, 2025

தோனி இடத்தில் KL ராகுல்?

image

டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து வெளியேற KL ராகுல் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அவர் வெளியேறினால் CSK, KKR, SRH அணிகள் வாங்க தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை அணியின் வி.கீ பேட்ஸ்மேனான தோனி, IPL தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என கூறப்படும் நிலையில், அடுத்த நபரை தேர்ந்தெடுக்க CSK அணி நிர்வாகம் மும்முரம் காட்டி வருவதாக கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News September 2, 2025

ஸ்டாலின் ஒரு கோழை: அன்புமணி சாடல்

image

வன்னியர் சமூகத்தின் எதிரியாக ஸ்டாலின் உள்ளார் என்று அன்புமணி சாடியுள்ளார். திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுகவிற்கு ஒரு வன்னியர் கூட வாக்களிக்கக்கூடாது என்றார். ஸ்டாலின் ஒரு கோழை என்ற அவர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை காரணத்திற்காகவே நடைபயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஒரு பஞ்சாயத்து தலைவருக்கு கூட சாதிவாரி கணக்கெடுக்க உரிமை உள்ளதாகவும் கூறினார்.

error: Content is protected !!