News March 22, 2025

ராக்கெட் வேகத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சி

image

பணவீக்கம், உக்ரைன் போர் உள்ளிட்ட காரணிகளால் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்ட போதும், இவை அனைத்தையும் இந்தியா தவிடுபாெடியாக்கி உள்ளது. 2015-2025 வரை இந்திய பொருளாதார வளர்ச்சி 2.4 டிரில்லியன் டாலரில் இருந்து 4.3 டிரில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது. இது 105% வளர்ச்சி. இதே வேகத்தில் சென்றால் இந்தாண்டில் ஜப்பானையும், 2027இல் ஜெர்மனியையும் இந்தியா முந்திவிடும் என IMF கணித்துள்ளது.

Similar News

News March 23, 2025

அஜித் குமாரின் ஆசை இதுதான்…!

image

ஏப்.10-ல் வெளியாகும் குட் பேட் அக்லி படத்தை கொண்டாட ரசிகர்கள் தயாராகிவரும் நிலையில், அஜித் கூலாக இத்தாலியில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்றுள்ள அவர், கார் ரேஸ் குறித்து மனம் திறந்துள்ளார். ஒரு அணியின் வீரராக, உரிமையாளராக இருப்பது கௌரவம் என தெரிவித்த அஜித், இன்னும் பல ஆண்டுகள் கார் ரேஸில் ஈடுபட விரும்புவதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

News March 23, 2025

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு

image

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தல் தொடர்பான பிரச்னைகள் குறித்து அரசியல் கட்சிகளிடம் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். தலைமைச் செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

News March 23, 2025

SRH vs RR: சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங்!

image

ஹைதராபாத்தில் நடைபெறும் SRH அணிக்கு எதிரான போட்டியில் RR அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில், சஞ்சு சாம்சன் Impact வீரராக களமிறங்குகிறார். பேட்டிங்கில் மிரட்டும் SRH அணி இந்த போட்டியில் எவ்வளவு ரன்களை குவிக்கும் என நினைக்குறீர்கள்?

error: Content is protected !!