News December 6, 2024

பிறந்தநாள் கொண்டாடும் இந்திய கிரிக்கெட் Stars

image

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா, ஜடேஜா ஆகியோர் இன்று தங்களின் பிறந்தநாளை கொண்டாட உள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்திய அணிக்காக இவர்கள் மூவரும் செய்த சாதனைகள் அளப்பரியது. மேலும் இன்று முன்னாள் வீரர்களான ஆர்.பி சிங், கருண் நாயரும் பிறந்தநாள் கொண்டாட உள்ளனர். Happy birthday indian cricket stars.

Similar News

News November 27, 2025

சையது முஷ்டாக் அலி கோப்பையில் சாய் சுதர்சன்

image

அஹமதாபாத்தில் நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டிகளில், தமிழ்நாடு சீனியர் அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று மிகப்பெரிய தோல்வியில் முடிந்த SA-க்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 15 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 14 ரன்களும் மட்டுமே சுதர்சன் எடுத்திருந்தார். இந்நிலையில் தான் அவர் சையது தொடரில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

News November 27, 2025

UNESCO தலைமையகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு

image

இந்திய அரசியலமைப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி, பாரிஸில் உள்ள UNESCO தலைமையகத்தில் டாக்டர் அம்பேத்கரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்று PM மோடி நெகிழ்ந்துள்ளார். அம்பேத்கரின் எண்ணங்களும் லட்சியங்களும், மக்களுக்கு வலிமையையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன என்றும் அவர் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

News November 27, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 532 ▶குறள்: பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. ▶பொருள்: நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்.

error: Content is protected !!