News February 17, 2025

இந்திய கடலோரக் காவல் படையில் வேலைவாய்ப்பு

image

இந்திய கடலோரக் காவல்படையில் 300 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அந்த பணியிடங்களின் பெயர் நேவீக் (மாலுமி) ஆகும். வேலைக்கான கல்வித் தகுதியாக 12ஆம் வகுப்பு தேர்ச்சியும், குறைந்தபட்ச வயதாக 18, அதிகபட்ச வயதாக 22ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதி கடைசி நாளாகும். கூடுதல் தகவல்களை கடலோரக் காவல்படை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Similar News

News March 8, 2026

உலகப்போரையே நிறுத்திய பெண்கள்.. வரலாறு தெரியுமா?

image

புராணக் கதைகளால் போர் வெடிப்பதே பெண்களால்தான் என்ற தவறான புரிதல் சமூகத்தில் இருக்கிறது. ஆனால் உலகப்போரையே நிறுத்த பெண்கள் முக்கியப் பங்கு வகித்த வரலாற்றை பற்றி தெரியுமா? 8 மார்ச், 1917-ல் World War 1 போது பசி, பட்டினி, வறுமை இருந்தது. இதனை எதிர்த்து ஒன்று கூடிய பெண்கள் ‘Bread & Peace’ போராட்டத்தை ரஷ்யாவில் நடத்தினார்கள். 1918-ல் போர் நின்றதோடு, ரஷ்ய பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.

News March 8, 2026

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை(9.3.2026) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் நாளை இயங்காது. அதேநேரம், அரசு பொதுத்தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியின்படி மாற்றமின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 8, 2026

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் MLA

image

அதிமுக முன்னாள் MLA இளையக்கண்ணு திமுகவில் இணைந்துள்ளார். 2001 முதல் 2006 வரை ஏற்காடு சட்டமன்ற தொகுதி MLA-வாக பதவி வகித்த இளையக்கண்ணு, அதிமுகவிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். EPS மீது ஏற்பட்ட அதிருப்தியால் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

error: Content is protected !!