News November 7, 2025
INDIAN CITIZEN-ஆன ஆஸ்திரேலிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ், அந்நாட்டின் குடியுரிமையை துறந்து இந்திய குடியுரிமையை பெற்றுள்ளார். அவருடைய தாய் மும்பையை சேர்ந்த ஆங்லோ-இந்தியன் என்பதால் குடியுரிமையை பெற ஓராண்டு காலமாக முயற்சித்து வந்தார். இந்திய குடிமகனாக இருப்பதையே விரும்புவதாக அவர் அவ்வப்போது தெரிவித்திருக்கிறார். சர்வதேச போட்டிகளில் கலக்கிய இவர், இனி இந்தியராக Bengaluru FC அணியில் விளையாடவுள்ளார்.
Similar News
News November 7, 2025
தெருநாய்கள் வழக்கு: அரசுக்கு கெடுபிடி! 1/2

*உள்ளாட்சி அமைப்புகள் 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது சோதனை செய்ய வேண்டும் *பிடித்த தெருநாய்களை மீண்டும் அதே இடத்தில் விடக்கூடாது *சாலைகளில் திரியும் விலங்குகளை அகற்ற நெடுஞ்சாலை ரோந்து குழுவை அமைக்க உத்தரவு *அனைத்து மாநில அரசுகளும் இதை உறுதியாக கடைபிடித்து, 8 வாரங்களுக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
News November 7, 2025
தெருநாய்கள் வழக்கு: SC-ன் உத்தரவுகள் இதோ! 2/2

தெருநாய்கள் வழக்குகளை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. *பள்ளி, கல்லூரிகள், ஹாஸ்பிடல் பகுதிகளுக்குள் தெருநாய்கள் நுழைவதை தடுப்பதை உறுதி செய்ய வேண்டும் *அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவன பகுதிகளுக்குள்ளும் நாய்கள் நுழைவதை தடுக்க வேண்டும் *மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் ஆணை *இதை ஒரு அதிகாரியை நியமித்து கண்காணிக்க உத்தரவு.
News November 7, 2025
பாஜக அழைப்பு விடுத்தது: செங்கோட்டையன் பரபரப்பு

பாஜக தூண்டிவிடுவதால்தான் போர்க்கொடி தூக்குவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்கவும், கூட்டணிக்காக பேசவும் தான் பாஜக தன்னை அழைத்ததாகவும், தன்னை வைத்து கட்சியை உடைக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். எனவே, பாஜக சொன்னதால்தான் 6 அமைச்சர்களுடன் சேர்ந்து ஒருங்கிணைப்பு பற்றி EPS-யிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


