News March 17, 2024
புதிய சாதனைப் படைத்தார் இந்திய தடகள வீரர்

கலிபோர்னியாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில், இந்திய வீரர் புதிய சாதனையை படைத்துள்ளார். ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில், இந்தியாவின் குல்வீர் சிங் 27.41.81 நிமிடங்களில் இலக்கை அடைந்து 2ஆம் இடம் பிடித்தார். இதன் மூலம் 2008ஆம் ஆண்டு பதிவான இந்தியாவின் சுரேந்திர சிங் (28:02.89) சாதனையை முறியடித்தார். இருப்பினும், 41 வினாடிகள் தாமதமானதால் ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை தவறவிட்டார்.
Similar News
News October 30, 2025
மக்கள்தொகை கணக்கெடுப்பு: நவம்பரில் முன்சோதனை

2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்காக டிஜிட்டல் முறையில் முன்-சோதனை எடுக்கப்படவுள்ளது. வீட்டு பட்டியல் & வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை நவ.10 – 30 வரையிலும், நவ.1 – 7 வரையும் சுய கணக்கெடுப்பு செய்வதற்கான சோதனையும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அஞ்செட்டி (கிருஷ்ணகிரி), ஆர்.கே.பெட் (திருவள்ளூர்), மாங்காடு (காஞ்சி) ஆகிய 3 இடங்களில் முன்-சோதனை நடத்தப்படவுள்ளது.
News October 30, 2025
ஒழுங்கற்ற மாதவிடாய்? 14 நாள் இத பண்ணுங்க போதும்!

பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் பிரச்னையால் அவதிப்படுகின்றனர். இது தொடர்பான அனைத்து பிரச்னைகளும் விலக பின்வரும் விதைகளை நீங்கள் சாப்பிட்டாலே போதும். மாதவிடாய் முடிந்த பிறகு 14 நாட்கள் சூரியகாந்தி, எள் விதைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு வரும் 14 நாட்கள் பூசணி, ஆளி விதைகளை சாப்பிடவும். இது உங்கள் மாதவிடாய் சுழற்சியை சீர் செய்யும் என டாக்டர்கள் சொல்றாங்க. பல பெண்களுக்கு பயனளிக்கும், SHARE THIS.
News October 30, 2025
சற்றுமுன்: தவெகவில் இருந்து விலகல்?

தலைமை புறக்கணிப்பதால், அதிருப்தியில் இருக்கும் தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன் கட்சியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கரூர் மக்களை விஜய் சந்தித்தபோது, நட்சத்திர விடுதியின் உள்ளே நுழைய விடாததால், வெங்கட்ராமன் நீண்ட நேரமாக காரின் ஹாரனை ஒலிக்கவிட்டார். இது விஜய்க்கு தெரியவந்ததால், புதிய நிர்வாக குழு பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை என்றும் கூறுகின்றனர்.


