News April 18, 2025
வரலாறு படைக்க போகும் இந்திய விண்வெளி வீரர்

சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா செல்ல உள்ளார். நாசா, ஆக்சியோம் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு இந்த ஆண்டு அனுப்புகிறது. அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி நாட்டவருடன் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுபான்ஷு மே மாதம் செல்ல உள்ளார்.
Similar News
News November 26, 2025
சென்னை வந்தடைந்த KAS & ஆதரவாளர்கள்

இன்று MLA பதவி ராஜினாமா, நாளை தவெகவில் இணைப்பு என்ற தகவலுக்கு மத்தியில், செங்கோட்டையன் சென்னை வந்துள்ளார். ஏர்போர்ட்டில் தவெகவில் இணைவது பற்றி கேட்டபோதும், அவர் மறுப்பு தெரிவிக்காமல் சென்றார். மேலும் , அவரது ஆதரவாளர்களில் பலரும் சென்னை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவருக்கும் ரூம் புக் செய்துள்ளதாகவும், இதனால் நாளைய அரசியல் களம் பரபரப்புக்கும் என்பதில் சந்தேகமில்லை.
News November 26, 2025
சற்றுநேரத்தில் புயல்: இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

இன்னும் சற்றுநேரத்தில் ( மதியத்திற்குள்) ‘சென்யார்’ புயல் உருவாகவுள்ளதால், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. அதேநேரம் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News November 26, 2025
ஜனநாயகன் டிரெய்லர் எப்போது?

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டிரெய்லர் புத்தாண்டு தினத்தன்று வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி, ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ஜன.9-ல் பொங்கல் ரிலீஸாக களம் காணவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிச.27-ல் மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் அனுராதா ஸ்ரீராம், ஆண்ட்ரியா, சைந்தவி உள்ளிட்ட பல முன்னணி பாடகர்களும் பங்கேற்கின்றனர்.


