News November 23, 2024
வேற லெவலில் மாறும் இந்திய ராணுவம்..!

இந்திய ராணுவத்தில் IT மற்றும் சைபர் செக்யூரிட்டி நிபுணர்களை பணியமர்த்தும் பணிகள் தொடங்கியுள்ளன. நவீன போர் யுத்திகளை மேம்படுத்தவும், டிஜிட்டல் சவால்களை எதிர்கொள்ளவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக ராணுவ துணை தளபதி ராகேஷ் கபூர் தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், விரைவில் ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News November 17, 2025
85,000 புள்ளிகளை நெருங்கிய சென்செக்ஸ்

வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. 388 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், 84,950.95 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல 103.40 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 26,013.45 புள்ளிகளில் நிறைவு செய்தது. குறிப்பாக ஆட்டோ, எனர்ஜி, மீடியா துறைகள் ஏற்றம் கண்டன. முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொலைகார நோக்கம் கொண்ட தீர்ப்பு: ஷேக் ஹசீனா

வங்கதேச Ex PM ஷேக் ஹசீனா, தனக்கு மரண தண்டனை விதித்த தீர்ப்பு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அரசு நிறுவிய மோசடி தீர்ப்பாயம் தனக்கு எதிராக தீர்ப்பளித்து, இது அரசியல் ரீதியான ஒருதலைபட்சமான தீர்ப்பு என அவர் கூறியுள்ளார். மேலும், மக்களால் கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மீதான கொலைகார நோக்கத்தை இது காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.