News April 20, 2025
டிரம்பை எதிர்க்கும் இந்திய, சீன மாணவர்கள்

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக 3 இந்திய மாணவர்கள், 2 சீன மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். சர்வதேச மாணவர்களுக்கான F-1 மாணவர் அந்தஸ்தை அரசு சட்டவிரோதமாக ரத்து செய்வதால் தங்கள் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். டிரம்ப் அதிபராக பதவியேற்றது முதல், அந்நாட்டில் குடியேற்ற சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
Similar News
News December 29, 2025
ATM-ல் உங்கள் பணம் சிக்கி கொண்டதா? இத பண்ணுங்க

➤அக்கவுண்டில் உள்ள பணம் குறைந்திருக்கிறதா பாருங்கள் ➤ATM இருக்கும் இடம், தேதி/நேரம், தொகை ஆகியவற்றை குறித்துவைத்து கொள்ளுங்கள் ➤வங்கிக்கு நேரடியாக செல்ல முடியவில்லை என்றால், மொபைல் APP-ல் “Failed ATM Transaction” என்ற ஆப்ஷன் மூலம் புகாரளியுங்கள் ➤5 நாள்களில் உங்கள் பணம் உங்களிடம் வந்துசேரும். தாமதமாகும் பட்சத்தில், வங்கி உங்களுக்கு நாளொன்றுக்கு ₹100 இழப்பீடு வழங்கவேண்டும். SHARE.
News December 29, 2025
‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ போட்டோவில் தமிழிசை!

திமுக மகளிர் அணி சார்பில் பல்லடத்தில் இன்று ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில் கனிமொழி X-ல் பகிர்ந்துள்ள ஒரு போட்டோ அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. தமிழிசையுடன் எடுத்த செல்ஃபியை பகிர்ந்த அவர், ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என பதிவிட்டுள்ளார். இது TN அரசியலில் கவனம் பெற்ற நிலையில், இருவரும் ஒரே விமானத்தில் பயணித்த போது இந்த போட்டோவை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
News December 29, 2025
ஓரங்கட்டப்படுகிறாரா ரிஷப் பண்ட்?

T20 WC-யில் இடம் கிடைக்காத பண்ட் NZ-க்கு எதிரான ODI தொடரிலும் ஓரங்கட்டப்படலாம் என கூறப்படுகிறது. இஷான் கிஷன் T20 WC அணியை தொடர்ந்து NZ-க்கு எதிரான ODI தொடரிலும் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக, பண்ட்தான் அணியில் இருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. T20, ODI-ல் ஓரங்கட்டப்படும் அவர், முழு நேர டெஸ்ட் வீரராக மாறலாம் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


