News May 18, 2024

2025 ஜனவரியில் ‘இந்தியன் 3’ வெளியீடு

image

‘இந்தியன் 3’ திரைப்படம், 2025 ஜனவரியில் வெளியாகும் என இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ஷங்கர், “இது பெரிய கதை என்பதால் 3 மணி நேரத்திற்குள் படத்தின் நீளத்தை குறைக்க முடியவில்லை. அதனால் தான் 2 பாகங்களாக வெளியிட முடிவெடுத்தோம்” எனத் தெரிவித்தார். இதுகுறித்து கமல் பேசுகையில், “இந்தியன் 3 படத்தின் கதையை கேட்டுத்தான் 2ஆம் பாகத்திற்கே ஒப்புக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.

Similar News

News March 20, 2026

திருச்சி: ரம்ஜான் பண்டிகை சிறப்பு ரயில் அறிவிப்பு

image

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து திருச்சி வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இன்று (மார்ச்.20) இரவு 11:45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில், நாளை மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கத்தில் மார்ச்.22 இரவு 11:25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11:15 மணிக்கு சென்னை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 20, 2026

நடிகை த்ரிஷா திடீர் முடிவு.. ரசிகர்கள் சோகம்

image

த்ரிஷா<<19411907>> சினிமாவை விட்டு விலக முடிவு<<>> செய்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில், புதிய படங்கள், வெப் சீரிஸ் ஆஃபர்களை அவர் நிராகரித்திருப்பதாக கூறப்படுகிறது. அவரது திடீர் முடிவு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அவர் அரசியலில் ஈடுபடவுள்ளாரா எனவும் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இதுகுறித்து த்ரிஷா தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

News March 20, 2026

ஹார்முஸ் நீரிணையில் களமிறங்கும் உலக நாடுகள்

image

போர் பதற்றத்திற்கு நடுவே ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் பயணத்திற்கு உதவ தயார் என ஜப்பான் & ஐரோப்பிய நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன. இதுதொடர்பாக டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், ஜப்பான் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்துள்ளன. ஈரானின் தாக்குதலுக்கு இந்நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மைக்கும் உறுதியளித்துள்ளன.

error: Content is protected !!