News March 26, 2024
இந்தியன் – 2 படப்பிடிப்பு நிறைவடைந்தது!

கமல்ஹாசன் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவான, இந்தியன் 2 & 3 ஆகிய இரு படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது, இந்தியன் 2 படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், கூடிய விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் மணிரத்னம் இயங்கும் ‘தக் லைஃப்’ படத்தின் பணிகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 5, 2025
BREAKING: விஜய் கண்ணீருடன் அஞ்சலி

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக பொதுக்குழுக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியுள்ளது. பொதுக்குழு தொடங்கிய உடன் கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செய்தார். இதன்பின், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு விஜய் உள்ளிட்ட அனைத்து தவெக நிர்வாகிகளும் கண்ணீருடன் மெளன அஞ்சலி செலுத்தினர்.
News November 5, 2025
பொன்முடிக்கு மீண்டும் பதவி: இதுதான் காரணமா?

பெண்கள் பற்றி சர்ச்சையாக பேசியதால் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பொன்முடிக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி கிடைத்துள்ளது. இதற்கு பின்னால் தலைமையின் மாஸ்டர் பிளான் இருக்கிறதாம். அதாவது, விழுப்புரத்தை கவனித்து வந்த MRK பன்னீர்செல்வம் கடலூரை சேர்ந்தவர் என்பதால், கட்சிப் பணிகளை செய்ய சிரமம் இருக்கிறதாம். எனவே, தேர்தலை கருத்தில் கொண்டு பொன்முடியை ஆட்டத்திற்குள் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
News November 5, 2025
Health Insurance எடுக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க!

ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் போது, இந்த 3 விஷயங்களை கண்டிப்பாக கவனியுங்க: ◆Policy Exclusions: எந்தெந்த சிகிச்சைகளுக்கு பணம் கொடுக்கும் என்பதை தெளிவாக படியுங்கள் ◆Add On: ஹாஸ்பிடலில் மற்ற பிற வசதிகளை(Eg: room rent) கவர் செய்ய, Add On-ஐ சேர்க்கவும் ◆Network Hospitals: ஒவ்வொரு இன்சூரன்ஸ் கம்பெனிக்கும் சில ‘நெட்வொர்க்’ ஹாஸ்பிடல்கள் இருக்கும். அது என்னென்ன என கவனிக்க வேண்டியது அவசியம். SHARE IT.


