News June 26, 2024
இந்தியன் 2: ஷங்கர் சொன்ன தகவல்

‘இந்தியன் 2’ ஜூலை 12ல் வெளியாக உள்ள நிலையில், ‘இந்தியன் 3’ அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தை 2 பாகங்களாக வெளியிட வேண்டிய அவசியத்தை இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார். அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி கதை பின்னப்பட்டுள்ளதால், பெரிய படமாக உருவானதாகவும், எடிட்டிங்கில் குறைத்தால் ஆன்மா சிதைந்து விடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News October 29, 2025
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

கடந்த சில நாள்களாக மளமளவென சரிந்து வந்த தங்கம் விலை இன்று(அக்.29) திடீரென உயர்வை கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹135 உயர்ந்து ₹11,210-க்கும், சவரன் ₹1,080 உயர்ந்து ₹89,680-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் குறைந்து வரும் நிலையிலும், நம்மூர் சந்தையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 29, 2025
திரைப்படங்களான பிரபல நாவல்களின் பட்டியல்!

புத்தகங்களை மையமாக கொண்டு படம் எடுப்பது என்பது சாதாரணம் விஷயமல்ல. காரணம் புத்தகம் படிப்பவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் கற்பனைக்கு ஏற்றார்போல அந்த கதைக்கு வடிவம் கொடுத்திருப்பர். அந்த கற்பனைகளுக்கு உருவம் கொடுத்து, மையக்கருவையும் மாற்றாமல் படமாக எடுத்து ஜெயிப்பது கடினமான விஷயம். அப்படி தமிழ் நாவல்களை மையமாக வைத்து, நமது தமிழ் இயக்குநர்கள் எடுத்த சில படங்களை பற்றி அறிய மேலே SWIPE பண்ணி பாருங்க.
News October 29, 2025
நடிகர் பிரபு வீட்டில் பதற்றம்.. போலீசார் குவிப்பு!

சென்னை தி.நகரில் உள்ள நடிகர் பிரபு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், போலீசார் குவிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. அதேபோல் அமெரிக்க துணை தூதரகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக CM ஸ்டாலின் தொடங்கி, EPS, ரஜினி, விஜய் என பல பிரபலங்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர் கதையாகி வருகிறது.


