News June 28, 2024
இந்தியா அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 20 ஓவர்களுக்கு இந்தியா 171 ரன்களை எடுத்திருந்த நிலையில், 16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இங்கிலாந்து இழந்தது. நாளை இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.
Similar News
News September 19, 2025
பாலியல் வழக்கில் சமிர் மோடி கைது

முன்னாள் ஐபிஎல் சேர்மன் லலித் மோடியின் தம்பி சமிர் மோடி டெல்லி ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வேலைவாய்ப்பு தருவதாக கூறி பெண் ஒருவருக்கு சமிர் மோடி, தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டலும் விடுத்துள்ளார். அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சமீர் மோடி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் பணம் பறிப்பதற்காகவே புகாரளிக்கப்பட்டுள்ளதாக சமிர் மோடி தரப்பு கூறுகிறது.
News September 19, 2025
OTT-ல் வெளியாகும் மகா அவதார் நரசிம்மா

மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று நரசிம்ம அவதாரம். இதனை மையமாக கொண்டு ‘மகா அவதார் நரசிம்மா’ என்ற படம் வெளியானது. ₹13 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ₹300 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வாரி குவித்தது. அனிமேஷன் படமாக வெளியானதால், குழந்தைகள் உள்பட அனைவரும் ரசித்தனர். இந்நிலையில், இந்தப் படம் நாளை முதல் Netflix தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகிறது.
News September 19, 2025
75 வயதில் விரதமிருக்கும் PM மோடி

செப்.17-ம் தேதி 75-வது பிறந்தநாள் கொண்டாடிய PM மோடி, ஜூன் மத்தியில் தொடங்கிய சாதுர்மாஸ் விரதத்தை கடைபிடித்து வருகிறார். 4 மாதங்கள் நீடிக்கும் இந்த விரத காலத்தில் PM ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவு சாப்பிடுவார். 9 நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரியில் PM, உணவு சாப்பிடுவதை தவிர்த்து தண்ணீர் மட்டுமே குடிப்பார் என்று கூறப்படுகிறது. அதே போல சைத்ர நவராத்திரி விரதத்தையும் பிரதமர் கடைபிடிக்கிறார்.