News April 10, 2024
I.N.D.I.A 400 இடங்களுக்கு மேல் வெல்லும்

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் பெற்று வெற்றி பெறும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலை விட இரு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர்கள் வெல்வார்கள் என்றும் அவர் பேசியிருக்கிறார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
Similar News
News January 21, 2026
சாப்பிடும்போது பேசுகிறீர்களா? இது உங்களுக்குதான்!

சாப்பிடும்போது பேசுவது செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வாய் வழியாக வயிற்றில் அதிகப்படியான காற்று நுழைவது ஏப்பம் மற்றும் வாயு பிரச்னைகளை ஏற்படுத்தும். உணவு, உணவுக்குழாயில் செல்வதற்கு பதிலாக மூச்சுக்குழாய்க்குள் சென்று கடுமையான இருமலை ஏற்படலாம். சரியாக மெல்லாததால், செரிமான சாறுகள் உணவில் கலக்காமல், அமிலத்தன்மை பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
News January 21, 2026
TCL உடன் கைகோர்த்த சோனி

சோனி தனது டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் பிரிவை மேம்படுத்த சீன நிறுவனம் TCl உடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. இதில் TCL 51% பங்கையும், சோனி 49% பங்கையும் வைத்திருக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டுத் முயற்சியின் மூலம் Sony Bravia டிவி தயாரிப்பு, விற்பனை மற்றும் பிற செயல்பாடுகளை உலகமெங்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
News January 21, 2026
ஜனவரி 21: வரலாற்றில் இன்று

*1924 – சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மறைந்தார். *1945 – இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ராஷ் பிஹாரி போஸ் மறைந்தார். *1972 – திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியவை இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன. *2009 – செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் அமைக்கப்பட்டது. *2017 – தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் உச்சத்தை எட்டியது.


