News October 18, 2025

இந்தியா அமைதியாக இருக்காது: PM மோடி

image

கொரோனாவிற்கு பிறகு உலகம் முழுவதும் போர்கள், பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருவதாக PM மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.8%ஆக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் எனவும், ஆபரேஷன் சிந்தூர், சர்ஜிகல் ஸ்டிரைக் என பதிலடி கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 18, 2025

BREAKING: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

image

தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் புதிய தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இது, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுள்ளதால் தென் தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என கூறப்பட்டுள்ளது.

News October 18, 2025

சற்றுமுன்: 3 கிரிக்கெட் வீரர்கள் மரணம்

image

பாக்.,கின் வான்வழி தாக்குதலில் ஆப்கனின் கபீர், சிப்கதுல்லா & ஹாரூன் என்ற 3 கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பயிற்சி முடிந்து சொந்த ஊருக்கு சென்றபோது அவர்களுக்கு இக்கதி நேர்ந்துள்ளது. இச்சம்பவத்தை பாக்.,கின் கோழைத்தனம் என குறிப்பிட்ட ஆப்கன் கிரிக்கெட் வாரியம், பாக்., பங்கேற்கும் Tri-nation series-ல் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஆப்கன் தெரிவித்துள்ளது.

News October 18, 2025

விஜய்க்காக காத்திருக்கும் இபிஎஸ்: பெங்களூரு புகழேந்தி

image

அதிமுக என்னும் மாபெரும் இயக்கம் 55-வது ஆண்டில் அடியெடுத்து வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். விஜய்யிடம் இருந்து எப்போது அழைப்பு வரும் என இபிஎஸ் காத்துக்கொண்டு இருப்பதாக விமர்சித்தார். மேலும், தற்போது அவரின் நடவடிக்கையை பார்த்தால், பாஜகவை கழற்றிவிட்டு, விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர நினைக்கிறார் போல தெரிகிறது எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!