News July 25, 2024

அரையிறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா

image

ஆசிய கோப்பை மகளிர் டி20 போட்டியில் நாளை (ஜூலை 26) நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய மகளிர் அணி. மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணிகள் ஜூலை 28ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும். நாளை இந்திய அணி வெற்றிபெறுமா?, எந்த இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு செல்லும் என கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News April 2, 2026

நாமக்கல்: கார் மோதி பரிதாப பலி!

image

வெண்ணந்துார் பகுதியை சேர்ந்தவர் பாப்பு (77). இவர், நேற்று அத்தனுார் பகுதியில் புளிய மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் அருகே, கார் நின்று கொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் அதிவேகமாக வந்த மற்றொரு கார் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி, நின்று கொண்டிருந்த கார் பாப்பு மீது மோதியது. தலையில் காயமடைந்த பாபுவை ராசிபுரம் GH-ல் சேர்த்த போது, அவர் உயிரிழந்தார். வெண்ணந்துார் போலீசார் விசாரனை.

News April 2, 2026

கிறிஸ்தவர்கள் மீது மத்திய அரசு நேரடி தாக்குதல்: ஸ்டாலின்

image

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்ட மசோதா 2026 என மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களுக்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னதாக, வஃக்பு வாரிய திருத்தம் மூலம் இஸ்லாமிய சொத்துகளைக் கபளீகரம் செய்ய முயன்றதை போல், தற்போது கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களை குறிவைத்து நேரடி தாக்குதல் நடத்தப்படுவதாக சாடியுள்ளார். எனவே, இதை திரும்பப் பெற வேண்டும் என்று மோடியை வலியுறுத்தியுள்ளார்.

News April 2, 2026

சாத்தான்குளம் வழக்கு: இன்று தண்டனை விவரம்

image

சாத்தான்குளம் தந்தை, மகன் லாக்-அப் மரண வழக்கில் கைதான 9 போலீஸும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட கோர்ட் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என CBI & தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாக தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று இருதரப்பும் அறிக்கை சமர்ப்பிக்கும் பட்சத்தில், தண்டனை விவரத்தை கோர்ட் இன்றே அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!