News June 12, 2024
வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும்

உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. 2025 – 2027ஆம் ஆண்டு வரை வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) 6.7%ஆக இருக்கும். தனியார் முதலீட்டுடன் வலுவான பொது முதலீடு உள்ளதால், இந்தியாவை உள்ளடக்கிய தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024-26 ல் சராசரியாக சுமார் 3%ஆக வளரும். இது 2010-19 ன் சராசரியை விட மிகக் குறைவு என தெரிவித்துள்ளது.
Similar News
News November 12, 2025
ஏ.ஆர்.ரஹ்மானை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

பாலியல் வழக்கில் சிறை சென்று ஜாமினில் வந்த ஜானி மாஸ்டர், AR ரஹ்மான் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘பெடி’ படத்தில் இருவரும் ஒன்றாக பணியாற்றும் நிலையில், இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, பாலியல் வழக்கில் தொடர்புடையவருடன் ரஹ்மான் இணைந்து பணியாற்றுவது சரியா என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
News November 12, 2025
பாஜகவின் திருட்டுத்தனம்: செந்தில் பாலாஜி

TN மக்களின் வாக்குரிமையை பறிக்கும் பாஜகவுக்கு அதிமுக துணை போவதாக செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். வருமான வரித் துறை, ED, CBI மூலமாக பாஜக அரசு தேர்தலில் வெற்றி பெற நினைத்து தோல்வியடைந்தது எனவும், அதனால்தான் SIR மூலமாக திருட்டுத்தனமாக வெற்றிபெற நினைக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும், பிஹாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கியதை போல, TN-யிலும் நீக்க முயற்சிக்கிறார்கள் என விமர்சித்துள்ளார்.
News November 12, 2025
அனைத்து ஆண்களுக்கும் மாதம் ₹1,000? CLARITY

தமிழகத்தில் ஆண்களுக்கு மாதந்தோறும் அரசு ₹1,000 வழங்குவதாக கூறி, குறிப்பிட்ட APP-ஐ டவுன்லோடு செய்ய சொல்லி செய்திகள், காணொலிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால், இது முற்றிலும் வதந்தி என அரசின் TN Fact Check மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ் புதல்வன் திட்டத்தில், அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே மாதம் ₹1,000 வழங்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.


