News May 7, 2025
நாளைக்குள் இந்தியா தாக்கும்: பாக்., அமைச்சர்

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இன்னும் 24 – 36 மணிநேரத்தில் இந்திய ராணுவம் இஸ்லாமாபாத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாக்., அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்த இந்தியா தயாராகி வருவதாக நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் உள்ளதாக PM மோடி நேற்று தெரிவித்து இருந்தார்.
Similar News
News January 8, 2026
புன்னகை பூவாக மலரும் மிருணாள் தாகூர்!

‘சீதா ராமம்’ என்ற ஒற்றை படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மிருணாள் தாகூர் மாறினார்.
அதுமட்டுமல்ல ஒரு தமிழ் படத்தில் கூட நடித்ததில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக வாழ்ந்து கொண்டிருப்பவர் மிருணாள். தனது சிரிப்பு மற்றும் கண்கள் செய்யும் மாயஜாலத்தால் அனைவரும் கவரும் அவர், இன்ஸ்டாவில் தனது லேட்டஸ்ட் போட்டோஸை பகிர்ந்துள்ளார். அதை மேலே Swipe செய்து அதை பாருங்க.
News January 8, 2026
8 போர்களை நிறுத்தியும் நோபல் பரிசு இல்லை: டிரம்ப்

அமைதிக்கான நோபல் பரிசு வழங்காததற்காக நார்வே மீது தனது கோபத்தை டிரம்ப் வெளிப்படுத்தினார். தனியாக 8 போர்களை நிறுத்திய தன்னை, NATO உறுப்பினரான நார்வே நோபல் பரிசுக்கு பரிந்துரைக்காதது முட்டாள்தனமான செயல் என சாடினார். ஆனால், நோபல் தனக்கு ஒரு பொருட்டல்ல என்றும் பல கோடி உயிர்களைக் காப்பாற்றியதே போதும் எனவும் குறிப்பிட்டார். US இல்லை என்றால் NATO மீது சீனா, ரஷ்யாவுக்கு பயம் இருக்காது எனவும் கூறினார்.
News January 8, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 574
▶குறள்:
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
▶பொருள்: வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?


