News August 3, 2024
ஆஸி.,-க்கு பாடம் கற்பித்த இந்தியா: முன்னாள் வீரர்

52 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் ஆஸி.,-யை இந்தியா வீழ்த்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் அஜித் பால் சிங், ஹாக்கியை எப்படி விளையாட வேண்டும் என ஆஸி.,-க்கு இந்தியா பாடம் கற்பித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தற்போது நம்மால் எந்த அணியையும் வெல்ல முடியும் எனவும், பதக்கத்தை வெல்லவே பாரிஸ் வந்திருக்கிறோம் என இந்தியா நிரூபித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News December 9, 2025
நார்த்தங்காயின் நன்மைகள்

நார்த்தங்காயில் இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் சி & பி அதிகம் நிறைந்துள்ளது. நார்த்தங்காய் ஊறுகாய் போட மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நன்மைகளை தருகின்றன. அவை என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News December 9, 2025
இன்னும் 100 நாட்களே! யஷ் பட போஸ்டர் வைரல்!

யஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ படம் அடுத்த ஆண்டு, மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் 100 நாட்களே உள்ளதாக கூறி படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர். கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தில் டொவினோ தாமஸ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மினி வசந்த் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
News December 9, 2025
செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி.. பரபரப்பு குற்றச்சாட்டு

அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ள செங்கோட்டையனின் அண்ணன் மகன் <<18510806>>கே.கே.செல்வம்<<>>, செங்கோட்டையன் மீது அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் அதிமுகவிற்கு துரோகம் செய்திருப்பதாகவும், இபிஎஸ் மீது தவறான குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாகவும் சாடியுள்ளார். மேலும், தங்கள் குடும்பம் இல்லையென்றால், 2016 தேர்தலில் சித்தப்பா(செங்கோட்டையன்) தோல்வியை தழுவி இருப்பார் என்றும் கே.கே.செல்வம் குறிப்பிட்டுள்ளார்.


