News September 5, 2025
வலிமையுடன் இந்தியா – USA உறவு: பியூஷ் கோயல்

இந்தியா – USA இடையிலான உறவு என்பது மிகுந்த வலிமையுடன் இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா மீது USA 50% வரி விதித்தது பெரும் பிரச்னையாக மாறியுள்ள நிலையில் பியூஷுன் கருத்து கவனம் பெற்றுள்ளது. ஒரு சில கருத்துகள் தற்காலிகமாகவே சிக்கலை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக, புதிதாக 50 நாடுகளை இந்தியா அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News September 5, 2025
முகம் பொலிவுடன் இருக்க செய்யும் ‘வஜ்ராசனம்’

*வஜ்ரம் என்றால் வைரம். உடலுக்கு வைரம் போல உறுதியைத் தரக்கூடிய ஆசனம் இது. உடலின் மேல்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் என்பதால், முகம் பொலிவுடன் இருக்கும்.
*தரையில் முட்டிபோட்டு, கால்களின் மீது உட்காரவும்.
*கைகளை முழங்கால்களில் வைத்துக் கொள்ளுங்கள்.
*முதுகை நேராக வைத்து, மூச்சை உள்ளிழுத்து பின் வெளியேற்றுங்கள். *கவனம் முழுவதும் சுவாசத்தில் இருக்க வேண்டும். SHARE IT.
News September 5, 2025
தமிழகத்தில் உதயமாகிறதா புதிய கூட்டணி?

DMK+, ADMK+, NTK, TVK என நான்குமுனை போட்டியாக 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணியோ, ‘இன்னும் 4 மாசம்தான், பொறுத்துக்கோங்க, அப்புறம் நம்ம ஆட்சிதான். நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும்’ என கூறியுள்ளார். OPS, TTV தற்போது தனியாக உள்ள நிலையில், தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் யாருக்கு சாதகம்?
News September 5, 2025
அரசு கல்லூரி: விண்ணப்பிக்க செப்.30 வரை அவகாசம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு, கடந்த ஜூன் 20-ல் தொடங்கியது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வகுப்புகள் துவங்கிய நிலையில், பல்வேறு சூழல்களால் யாரேனும் விண்ணப்பிக்க தவறியிருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கே <