News April 15, 2025
வங்கதேசத்துடன் மோதும் இந்திய.. வந்தாச்சு அட்டவணை

வங்கதேச சுற்றுப்பயணத்துக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 3 ODI மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய – வங்கதேசம் விளையாட உள்ளது. ஆகஸ்ட் 17-ல் இருந்து 23 வரை ODI-யும், 26-ல் இருந்து 31-ம் தேதி வரை T 20 போட்டிகளும் நடைபெறுகிறது. இதனிடையே ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இங்கிலாந்துடனான தொடரை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
Similar News
News January 21, 2026
வெறுப்பு கருத்துகளை பேசுகிறார் உதயநிதி: கோர்ட்

சனாதன தர்மத்துக்கு எதிராக உதயநிதி வெறுப்பு கருத்துகளை பேசுவதாக சென்னை HC மதுரை கிளை சாடியுள்ளது. 2023-ல் சனாதனம் பற்றி பேசிய வழக்கை விசாரித்த கோர்ட், இந்து மதத்தின் மீது திகவும், திமுகவும் கடந்த 100 ஆண்டுகளாக தாக்குதல் நடத்துகின்றன என கூறியுள்ளது. மேலும், வெறுப்பு கருத்தை பேசுபவர்கள் தப்பித்துவிடுவதாகவும், அதனை எதிர்ப்பவர்களே தண்டிக்கப்படுவதாக கூறி அமித் மாளவியா மீதான வழக்கை ரத்து செய்துள்ளது.
News January 21, 2026
இனி ரயில்வே ஸ்டேஷன்களில் ₹14 தான்!

ரயில்வே ஸ்டேஷன்களில் ‘<<17789708>>ரயில் நீர்<<>>’ 1 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் ₹14-க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், விற்பனையாளர்களிடம் ‘ரயில் நீர்’ பாட்டில்கள் காலியானால், மற்ற தண்ணீர் பாட்டில்களையும்(Aquafina, Bisleri) ₹14-க்குதான் விற்க வேண்டும் என தற்போது IRCTC உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதிக விலைக்கு விற்பனை செய்தால், 139 என்ற ரயில்வே உதவி எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
News January 21, 2026
BREAKING: ஒரே நாளில் விலை தாறுமாறாக மாறியது

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு இரண்டே நாள்களில் ₹6,400 வரை உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதேநேரம், நேற்று புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை இன்று மாற்றம் ஏதும் இல்லாமல் அதே நிலையில் நீடிக்கிறது. இதன்படி, 1 கிராம் வெள்ளி ₹340-க்கும், 1 கிலோ ₹3.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. வரும் நாள்களிலும் தங்கம், வெள்ளி விலை அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.


