News April 26, 2024
மேலும் 8 சிவிங்கிப் புலிகளை வாங்கும் இந்தியா

தென்னாப்பிரிக்காவிடம் இருந்து மேலும் 5 முதல் 8 சிவிங்கிப் புலிகளை இந்தியா வாங்கவுள்ளது. இந்தியாவில் அழிந்துவிட்ட சிவிங்கிப் புலி இனத்துக்கு புத்துயிர் அளிக்க நமிபியா, தென்னாப்பிரிக்காவிடம் இருந்து 20 சிவிங்கிப் புலிகளை இந்தியா வாங்கியது. இதில் 7 இறந்துவிட்ட நிலையில், 12 குட்டிகள் பிறந்துள்ளன. இதைத் தொடர்ந்து 8 சிவிங்கிப் புலிகள், தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தாண்டு வரவுள்ளன.
Similar News
News September 19, 2025
புரட்டாசி வெள்ளியில் என்ன செய்தால் செல்வம் சேரும்?

புரட்டாசி வெள்ளிக்கிழமை அஷ்ட லட்சுமிக்குரிய நாளாகும். மகாலட்சுமியை நினைத்து சர்க்கரை பொங்கல், தேன் கலந்த பாயசம் ஆகியவற்றை நைவேத்தியமாக படையுங்கள். மேலும், மாலையில் லட்சுமி ஸ்தோத்திர பாராயணம் செய்வது சிறந்தது. மந்திரத்தை படிக்கும் போது வீட்டின் கதவை திறந்து வைத்திருக்க வேண்டும். அதே போல, துளசிச் செடிக்கு தண்ணீர் விட்டு, மஞ்சள்- கும்குமம் வைத்து வழிபடுவதும் மகாலட்சுமியின் அருள் கிடைக்க செய்யும்.
News September 19, 2025
ஆச்சர்யம் ஆனால் உண்மை..!

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறிய வரும்போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும் அதே சமயத்தில் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.
News September 19, 2025
திமுக, தவெகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

திமுக, தவெக, தேமுதிக, பாமகவில் இருந்து விலகிய 500-க்கும் மேற்பட்டோர் EPS முன்னிலையில் சேலத்தில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். 2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக மாற்றுக்கட்சியினர் பலரையும் கட்சியில் இணைத்து வருகிறது. அதேநேரம், திமுக மீது அதிருப்தி, மகளிர் உரிமைத்தொகை ₹1,000 கிடைக்கப்பெறாதவர்களை அதிமுகவில் இணைக்க நிர்வாகிகளுக்கு EPS புதிய அசைன்மென்டை கொடுத்துள்ளாராம்.