News February 28, 2025
சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்கிய இந்தியா

கடந்த 20 ஆண்டு காலமாக சீனாவின் பிடியில் இருந்த எலக்ட்ரானிக்ஸ் சந்தையை இந்தியா தன்வசப் படுத்தியிருக்கிறது. ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டும் இந்தியா, அதனை சீனா & வியட்நாம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியையும் தொடங்கியிருக்கிறது. உலக வர்த்தகத்தில் முக்கியமான இந்த மைல்கல் மூலம் எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா ஒடுக்கியுள்ளது.
Similar News
News February 28, 2025
WPL: டெல்லி அணிக்கு 124 ரன்கள் இலக்கு

மகளிர் பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடரில், டெல்லி அணிக்கு 124 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி. பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் முதலில் களமிறங்கிய MIW அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹெய்லி மேத்யூஸ் 22, ஹர்மன்பிரீத் 22, அமெலியா 17 ரன்கள் எடுத்தனர். DCW தரப்பில், ஜொனாசென், மின்னு மணி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
News February 28, 2025
மயிலாடுதுறை கலெக்டருக்கு அண்ணாமலை கண்டனம்

மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் மீது தவறு இருப்பதாக பேசிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன. அந்தவகையில், முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கலெக்டர் பேசியுள்ளதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் பழிபோட்டு, தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சுக்கு காரணம் என்று சாடினார்.
News February 28, 2025
சர்ச்சை கருத்து: மயிலாடுதுறை கலெக்டர் மாற்றம்

3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி, <<15609948>>சிறுமி தவறாலேயே<<>> அந்த சம்பவம் நடந்ததாகக் கூறியிருந்தார். அவரது கருத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, அவரை மாற்றி, அப்பதவியில் ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்தை தமிழக அரசு நியமித்துள்ளது.