News September 27, 2025
துருக்கி தூதரை கூப்பிட்டு கண்டித்த இந்தியா

ஐநா சபையில் காஷ்மீர் விவகாரம் பேசி தீர்க்க வேண்டும் என துருக்கி அதிபர் எர்டோகன் பேசியதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்னை எனவும், இதில் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவையில்லை என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிபட கூறியுள்ளது. மேலும், இந்தியாவிற்கான துருக்கி தூதரிடமும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
Similar News
News September 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 471
▶குறள்:
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
▶பொருள்: செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.
News September 27, 2025
விஜய் பேச்சுக்கு வைகோ வரவேற்பு

1.37லட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என வைகோ தெரிவித்துள்ளார். அந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் ஐநா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இலங்கை தமிழர்களுக்காக விஜய் உட்பட யார் குரல் கொடுத்தாலும், அதை மனதார வரவேற்பதாக சென்னையில் அளித்த பேட்டியில் வைகோ கூறியுள்ளார்.
News September 27, 2025
புதுச்சேரியில் தீபாவளிக்கு பரிசுத் தொகுப்பு

தீபாவளிக்கு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 5 பொருட்கள் கொண்ட சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. தீபாவளி தொகுப்பில், 2 கிலோ சர்க்கரை, 2 கிலோ சூர்ய காந்தி எண்ணெய், ஒரு கிலோ கடலைப் பருப்பு, அரை கிலோ ரவை, அரை கிலோ மைதா என 5 பொருட்கள் கொடுக்கப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள 3.45 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கும் இந்தத் தீபாவளி சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது.