News May 16, 2024
INDIA கூட்டணிக்கு ஆதரவாக புயல் வீசுகிறது

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் INDIA கூட்டணிக்கு ஆதரவாக புயல் வீசுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜக தனது பொய் தொழிற்சாலை மூலம் எவ்வளவு ஆறுதல்களை சொல்லிக்கொண்டாலும் எந்த மாற்றமும் ஏற்படாது என்று அவர், ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு மோடி பிரதமராக இருக்க மாட்டார் என்றார். இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திலேயே பாஜக இந்த தேர்தலை எதிர்கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
Similar News
News August 8, 2025
வாய்விட்டு அழணுமா? உங்களுக்காகவே ஒரு கிளப்

சொல்ல முடியாத துயரத்தின் போது வாய்விட்டு அழ வேண்டும் என தோன்றினாலும் அதை பலர் செய்வதில்லை. இதனால் மன அழுத்தம் மேலும் அதிகரிக்குமாம். இப்படி பாதிப்பு அடைபவர்களுக்காக
மும்பையில் ‘The crying club’ உருவாக்கப்பட்டுள்ளது. டீ, இசையுடன் உங்கள் பிரச்சனையை கேட்டு ஆறுதல் கூறவே இந்த club அமைக்கப்பட்டுள்ளது. இது வாய்விட்டு அழுதால், மனபாரம் குறையும் என்ற ஜப்பானிய சிகிச்சை முறையான Ruikarsu-வின் தொடர்ச்சியாம்.
News August 8, 2025
1 – 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்: TN அரசு திட்டவட்டம்

1 – 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சியளிப்பதை அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் என TN அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. CM ஸ்டாலின், வெளியிட்டுள்ள <<17339988>>மாநிலக் கல்விக் கொள்கையில்<<>> கற்றல் இடைவெளியை சரிசெய்யும் பொருட்டு தொடர் மதிப்பீடு, குறைதீர் கற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் அதேநேரம் தேக்கமின்மை கொள்கை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
News August 8, 2025
தொடர் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு

லோக் சபா இன்று கூடியதும் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அனுமதி கிடைக்காததால் அவர்கள் அமளியில் ஈடுபட, 3 மணி வரை லோக் சபா ஒத்திவைக்கப்பட்டது.. இதேபோல் ராஜ்யசாபாவிலும் கடும் அமளி ஏற்பட ஆக.11-ம் தேதி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி மட்டுமே இதுவரை முறையாக விவாதிக்கப்பட்டது.