News March 26, 2024
பிலிப்பைன்ஸ்க்கு ஆதரவாக நிற்கும் இந்தியா!

சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் பிலிப்பைன்ஸ் ராணுவக் கப்பல் மீது சீன கடலோர காவல்படை நடத்திய நீர் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. அரசு முறைப் பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். மணிலாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ‘பிலிப்பைன்ஸ் தனது இறையாண்மையை நிலைநிறுத்துவதற்கு இந்தியாவின் முழு ஆதரவு உறுதியாக இருக்கும்’ என்றார்.
Similar News
News November 5, 2025
பெண்கள் குளியல் வீடியோ SALES.. தமிழகத்தில் அதிர்ச்சி

ஓசூர், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பெண்கள் விடுதியின் <<18207187>>கழிவறையில் ரகசிய கேமரா<<>> பொருத்திய பெண் பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். விடியல் விடுதியின் 8-வது பிளாக்கில் உள்ள குளியல் அறையில்தான் இந்த அவலம் அரங்கேறியுள்ளது. கேமராவில் பதிவான காட்சிகளை அந்த பெண் பணியாளர் தனது நண்பர்கள் மூலம் விற்பனை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உஷாரா இருங்கள் சகோதரிகளே..!
News November 5, 2025
Business Roundup: அனில் அம்பானி மீது பிடியை இறுக்கும் அரசு

*Porter நிறுவனம் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. *2026 நிதியாண்டின் 2-வது காலாண்டில் Paytm ₹211 கோடி லாபம் ஈட்டியுள்ளது. *மகளிர் உதவி தொகையால் பல மாநிலங்கள் கடும் நிதி அழுத்தத்தை சந்திப்பதாக PRS அறிக்கையில் தகவல். *அனில் அம்பானியின் நிதி மோசடி வழக்கை கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் கையில் எடுத்துள்ளது. *OpenAI பயன்படுத்துவதில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது.
News November 5, 2025
விஜய் முதல்வர் வேட்பாளரா? ஜெயக்குமார் பதில்

தவெகவின் CM வேட்பாளர் விஜய் என பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவந்திருப்பது அவர்கள் உரிமை ஆனால், முதல்வரை முடிவு செய்வது மக்கள் என ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். SIR தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பிறகு பேசிய அவர், தேர்தல் அலுவலர்களை மிரட்டி திமுகவினர் படிவங்களை பறிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். SIR மூலம் சிறுபான்மையினரின் வாக்குகள் பறிக்கப்படும் என சிலர் கூறுவதில் உண்மை இல்லை என்றார்.


