News March 6, 2025

ஷேக் ஹசீனா விவகாரத்தில் INDIA மௌனம்: முகமது யூனுஸ்

image

ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடர்பாக இந்தியாவிடம் இருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் கூறியுள்ளார். ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறும் முன் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் என்றும், இது குறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆக.5ஆம் தேதி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்.

Similar News

News March 6, 2025

மண்டையை பிளக்கும் வெயில்

image

மாசி மாதம் கூட முடியவில்லை. அதற்குள் தமிழகத்தில் வெயில் பட்டையைக் கிளப்பி வருகிறது. குறிப்பாக, ஈரோடு – 39.2°C, கரூர் பரமத்தி – 39°C, மதுரை விமான நிலையம் – 38.6°C, வேலூர் & திருப்பத்தூர் 38.1°C, சேலம் & திருச்சி 37.8°C, சென்னை – 37.7°C என பதிவாகியிருக்கிறது. இவை அனைத்துமே 100°Fஐ கடந்த வெப்பநிலை ஆகும். பங்குனி, சித்திரை மாதங்களில் வெயில் சக்கை போடு போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News March 6, 2025

மும்பை மகளிர் அணிக்கு 151 ரன்கள் இலக்கு

image

மகளிர் பிரீமியர் லீக் T20 தொடரில், மும்பைக்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது உ.பி., அணி. லக்னோவில் டாஸ் வென்ற MIW அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய UPWW வீராங்கனைகள், முதலில் அதிரடியாக ஆடினாலும், பிறகு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் அந்த அணி 150/9 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜார்ஜியா 55 ரன்கள் எடுத்தார். MIW தரப்பில், அமெலியா 5 விக்கெட் வீழ்த்தினார்.

News March 6, 2025

20 வயது பாடி பில்டர் பெண் பலி

image

உடற்பயிற்சி உடலைக் காக்கும் என்பது உண்மை தான். ஆனால், சமீப ஜிம் மரணங்கள் நமக்கு அதிர்ச்சியை தருகின்றன. அமெரிக்காவில் இளம் பெண் பாடிபில்டரான ஜோடி வான்ஸ்(20) மாரடைப்பால் உயிரிழந்தார். பாடிபில்டிங் போட்டிக்கு முன், உடல் கட்டாக தெரிய, சில மணிநேரம் நீர் அருந்துவதை போட்டியாளர்கள் தவிர்ப்பர். அப்படி அவர் செய்ததால் நீர்ச்சத்து குறைந்து, அதனால் இதயம் செயலிழந்துள்ளது. கப்பும் முக்கியம், உயிரும் முக்கியம்!

error: Content is protected !!